இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒருநாள் உயர்வதும் அடுத்த நாள் குறைவதும் என சமமான ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தாலும், இன்ரேல் – பாலஸ்தீன போர் காரணமாக கடந்த மாத தொடகதக்தில் இருந்து பெரும் சரிவை சந்தித்த தங்கள் விலை கடந்த சில தினங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு இன்ரேல் – பாலஸ்தீன போர் போர் தற்காலிகமாக 4 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சற்று உயர்வை சந்தித்து. இதில் சவரணுக்கு ரூ80 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ45,920-க்கு கிராம் ஒன்றுக்கு ரூ10 அதிகரித்து ஒரு கிராம் ரூ5,740 –க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று (நவம்பர் 24) சரிவை சந்தித்த தங்கம் விலை, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி ஆபரன தங்கத்தின் விலை சரவனுக்கு ரூ160 அதிகரித்து ஒரு சவரன் ரூ46,040-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 4,766-ஆக ஆதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் சற்று அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ80.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ80,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“