Advertisment

எஃப்.டி. வைத்திருப்பது அவ்வளவு நல்லது! அவசர தேவைக்கு எப்படி உதவும் தெரியுமா?

Bank Fixed Deposite Update : வங்கிகளில் ஒரு நிலையான வைப்புத்தொகையை வைத்திருப்பதன் மூலம் ஐந்து முக்கிய நன்மைகளை பெறலாம்

author-image
WebDesk
New Update
ஃபிக்சட் டெபாசிட்: பாதியில் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?

Bank Fixed Deposit Benefits : முதலீட்டாளர்களுக்கும், புதிதாக முதலீடு செய்பவர்களுக்கும் சேமிப்பு என்பது நிலையான வைப்புத்தொகைகளுக்கு (FD கள்) சமமாகும். நிலையான வைப்புத்தொகை ஒரு புதிய வழி என இல்லையென்றாலும், அதன் உயர் பாதுகாப்பு அளவு காரணமாக ஒரு பிரபலமான முதலீட்டு தேர்வாக உள்ளது. குறிப்பாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு இந்த நிலையான வைப்புத்தொகை பெரிதும் உதவும். .

Advertisment

இதில் நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிடும்போது, ​​சொத்து ஒதுக்கீடு முக்கியமாக பார்க்கப்படுகிறது. சொத்து ஒதுக்கீடு என்பது உங்கள் பணத்தைப் பிரித்து, உங்கள் உங்களின் அவசர தேவை மற்றும் இதர தேவைகளின் அடிப்படையில் பங்கு, பத்திரங்கள் மற்றும் பணக் கருவிகளில் முதலீடு செய்வதற்கான ஒரு செயல்முறையாகும். நிலையான வைப்புத்தொகையில் பணப்புழக்கம் மற்றும் நிதி அவசரத்திற்கான உங்கள் பணம் சொத்து ஒதுக்கீட்டின் முக்கிய அங்கமாக இருக்கும்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலரும் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடியை சந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் நிலைமையைச் சமாளிக்க தங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் மக்கள் தங்களது அவசர செலவுகளைச் சமாளிக்க தங்கள் சேமிப்பில் கை வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வங்கிகளில் ஒரு நிலையான வைப்புத்தொகையை வைத்திருப்பதன் மூலம் ஐந்து முக்கிய நன்மைகளை பெறலாம் :

ஒப்பந்தகால விருப்பங்கள்:

ஒப்பந்தகாலத்திற்கு வரும்போது, ​​ஏராளமான விருப்பங்கள் உள்ளன. எஃப்.டி (பிஃசர் டெபாசிட்) ஒப்பந்தகாலத்தின் அடிப்படையில் வங்கிகள் மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வழக்கமாக, நீண்ட காலம், வைப்புத்தொகையின் வட்டி விகிதம் அதிகமாகும். டிபிஎஸ் வழங்கும் டிஜிபேங்க் 90 நாட்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளுடன் எஃப்.டிக்கு அதிக வட்டிவிகிதங்களை வழங்குகிறது. எனவே எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நிதி தேவைகளைப் பொறுத்து, நீங்கள் பொருத்தமான ஒப்பந்தகாலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

எளிதாக திரும்பப் பெறுதல்

எஃப்.டிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி நெகிழ்வுத்தன்மையுடன் வருகின்றன. அவசரநிலை இருந்தால், நீங்கள் எப்போதுமே முன்கூட்டியே வைப்புத் தொகையைத் திரும்பப் பெற தேர்வு செய்யலாம், இது உங்கள் சேமிப்புக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு வங்கி சில நேரங்களில் அபராதம் வசூலிக்கப்படாது.

பாதுகாப்பு

சந்தை நிலையற்ற தன்மையைக் கண்டு பயப்படுபவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் வங்கி நிலையான வைப்புக்கள் அளிக்கினறன. இதில் வட்டி வீத மாற்றங்களைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால், வைப்புத்தொகையின் காலம் நிர்ணயிக்கப்படும், முதலீட்டாளருக்கு எந்தவிதமான ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் உறுதியான வருமானத்தை வழங்கும்.

மேலும் சிறு வயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கு இது எஃப்.டிகள் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது., இதில் முதலீட்டாளர் அவர்களின் தேவைகளைப் பொறுத்து அளவு மற்றும் ஒப்பந்தங்களை பரிசோதிக்க முடியும்.

வைப்பு காப்பீடு

நிலையான வைப்பு வைத்திருப்பதன் மற்றொரு நன்மை இது. அனைத்து வங்கி வைப்புகளும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டிஐசிஜிசி) மூலம் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்படுகின்றன. இது நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு எஃப்.டிக்கும் பொருந்தும் மற்றும் இது எஃப்.டிகளுடன் தொடர்புடைய மற்றொரு பாதுகாப்பு வலையாகும். இந்த காப்பீட்டு அனைத்து வைப்புத்தொகையாளரின் பணத்திற்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது.

தொடங்குவது எளிதானது

இந்த நாட்களில் ஒரு நிலையான வைப்புத்தொகையைத் திறப்பது எளிதான விஷயம் மற்றும் சிக்கலான செயல்முறைகள் எதுவும் இல்லை. வங்கி உலகில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், உங்கள் வீட்டின் வசதியிலிருந்து மொபைல் அல்லது லேப்டாப் மூலம் சில நிமிடங்களில் உங்கள் நிலையான வைப்பை தொடங்கலாம். உங்கள் தனிப்பட்ட நிதி இலக்கின் அடிப்படையில் உங்கள் எஃப்.டி தொகையை கூட அமைக்கலாம்.

ஒரு எஃப்.டி.யில் முதலீடு செய்வது அவசர தேவைகளுக்கு பணம் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது, மேலும், முதிர்ச்சிக்கு முன்னர் நீங்கள் திரும்பப் பெற முடிவு செய்தால், உங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை விரைவாக டெபாசிட் செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Business Update 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment