ரயில் டிக்கெட் புக்கிங் அவ்ளோ ஈஸி… தாமதிக்காம இந்த அக்கவுண்டை ஓபன் பண்ணுங்க!

Tamil Business Update : வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் கம்யூட்டரை பன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்

IRCTC Ticket Booking Update In Tamil : இந்தியா முழுவதும் தினமு்ம பல்லாயிரக்கணக்காக மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் உள்ளூர் ரயில்களில் பயணிக்க பாஸ் உள்ளிட்ட சில வசதிகள் உள்ளன. ஆனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பு ரயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்து வசதிகளும், ஆன்லைனில் கிடைக்கிறது.

இந்த வசதிகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் கம்யூட்டரை பன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது மற்றும், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் புதிய கணக்கு எப்படி தொடங்குவது என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. தற்போது பண்டிகை நாட்கள் அதிகம் இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கடும்போட்டி உள்ளது. அதை மனதில் வைத்து, இந்திய ரயில்வே ஏற்கனவே பயணிகளின் வசதிக்காக பல சிறப்பு ரயில்களை தொடங்கியுள்ளது.

நீங்கள் புதிய ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கை உருவாக்குவதன் மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். புதிய ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கை எவ்வாறு உருவாக்குவது மற்றும் உங்களின் பயணத்திற்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில காணலாம்..

புதிய ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கை எவ்வாறு உருவாக்குவது?

முதலில், இந்திய ரயில்வேயின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் அல்லது அதன் அப்ளிகேஷன் சாப்ட்வேரில் (ஆப்) பதிவு செய்ய வேண்டும்.

சமீபத்தில் இது தொடர்பான செயல்முறையை விளக்கி, ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் ஆனால் இன்னும் ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கு இல்லை. சில எளிய வழிமுறைகளை புதிய கணக்கை உருவாக்கி, இப்போதே உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.

ஐஆர்சிடிசி- இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். இந்த பக்கத்தின் மேல், பதிவு விருப்பத்தை கிளிக் செய்யவும். அதில் ஐஆர்சிடிசி பதிவு படிவம் தோன்றும். அந்த படிவத்தில், உங்கள் பயனர்பெயரை நிரப்பவும், இந்த வார்த்தை 3 முதல் 35 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்

அதன்பிறகு  பாதுகாப்பு கேள்வி மற்றும் அதன் பதிலைத் தேர்ந்தெடுக்கவும் அடுத்து உங்கள் பெயர், பாலினம், திருமண நிலை, தொழில், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும். அடுத்து உங்கள் உள்நுழைவு கடவுச்சொல்லாக செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை நிரப்பவும்

அதன்பிறகு உங்கள் முழு முகவரியை உள்ளிடவும். பின்னர், படத்திலிருந்து உரையை உள்ளிட்டு, பின்னர் “சமர்ப்பி” பட்டனை கிளிக் செய்யவும். இதனையடுத்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் அனுப்பப்பட்ட குறியீட்டை உள்ளிட்டு கணக்கைச் சரிபார்க்கவும். அடுத்து “சமர்ப்பி” விருப்பத்தை கிளிக் செய்யவும்

இறுதியாக, “வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்டது” என்ற செய்தியைப் கிடைக்கபெறுவீர்கள்.

ஐஆர்சிடிசி- ல் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?

ஐஆர்சிடிசி இணையதளத்தை irctc.co.in இல் பார்வையிடவும். முகப்பு பக்கத்தில் உள்ள உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன்பிறகு உங்களது ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்த பிறகு, ‘உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்’ பக்கத்திற்குச் செல்லவும்

தொடக்க மற்றும் முடிவு நிலையம், போர்டிங் மற்றும் இலக்கு நிலையத்தை உள்ளிடவும். அதன்பிறகு உங்கள் பயணத்தின் தேதி மற்றும் நீங்கள் பயணிக்க விரும்பும் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதனை தேர்வு செய்த பிறகு  நீங்கள் விரும்பும் ரயிலில் இருக்கை கிடைக்கிறதா என சரிபார்க்கவும்

இருக்கைகள் இருந்தால், “இப்போது முன்பதிவு” விருப்பத்தை கிளிக் செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவையான விவரங்களைச் சேர்க்கவும் அடுத்து மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும். பின்னர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI – எது வசதியானதோ அதைப் பயன்படுத்தி ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துங்கள். இறுதியாக, உங்களது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாக உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil business how to open irctc account and ticket booking

Next Story
சொந்தமாக ATM; மாதம் ரூ.60,000 வரை வருமானம்: SBI-யின் இந்த ஆஃபர் எப்படி இருக்கு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express