Advertisment

3 மாத சம்பளம் அட்வான்ஸ்; திரும்ப செலுத்த வேண்டாம்: EPFO அதிரடி அறிவிப்பு

கடந்த முறை முன்பணம் பெற்ற நபர்களும் இம்முறை மூன்று மாத சம்பளம் வரை முன்பணமாக பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
second Covid-19 advance withdrawal

EPFO to allow second Covid-19 advance withdrawal : கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைப்பாடற்ற தன்மையை சமாளிக்க ஊழியர்கள் தங்களின் ப்ரோவிடன்ட் ஃபண்டில் இருந்து 3 மாத சம்பளத் தொகையை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தது மத்திய அரசு.

Advertisment

இது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதே போன்ற திட்டத்தை இரண்டாம் முறையாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஊழியர்கள் தங்களின் பி.எஃப். பணத்தில் 75%-த்தை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதற்காக விண்ணப்பித்த 3வது நாளிலேயே உங்களுக்கு உங்களின் பணம் கிடைத்துவிடும். இதனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வரை, ஈ.பி.எஃப்.ஓ. இது போன்று முன்பணம் கேட்டு 76.31 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. 18, 698 கோடி ரூபாய் பணம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா தொற்றோடு சேர்த்து கருப்பு பூஞ்சை என்ற நோயும் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கடினமான காலங்களில் ஈ.பி.எஃப்.ஒ உறுப்பினர்களுக்கு அவர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது. கடந்த முறை முன்பணம் பெற்ற நபர்கள் இம்முறையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment