SBI Gold Loan Update : இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வணிகங்களுக்கு எஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடனை வடிக்கையாளர்களை கவரக்கூடிய வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
எஸ்பிஐ எஸ்எம்இ தங்க கடனின் கீழ், நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல், ரூ .1 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை கடன் பெறலாம். “எஸ்பிஐயின் எஸ்எம்இ (SME) தங்கக் கடன் மூலம் உங்கள் தொழிலை மிகவும் நேர்த்தியாக வளர்க்க உதவும். இந்த திட்டத்தில் இப்போதே விண்ணப்பித்து கடனைப் பெறுங்கள். இதற்கான தொந்தரவு இல்லாமல் எளிமையான செயல்முறை மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பெற இன்றே உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையை அணுகலாம் என்று எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
Grow your business with SBI’s SME Gold Loan at very attractive rates. Apply now and avail the loan. Process is simple and hassle free.
— State Bank of India (@TheOfficialSBI) March 9, 2021
Visit our branch today!
For details, visit: https://t.co/6Df5OZkRu2#SBI #StateBankOfIndia #SMEGoldLoan #GoldLoan pic.twitter.com/5r4sRzbnOe
எஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடன் பெறும்போது நீங்கள் பிற பிற நன்மைகள் :
தொழில் வளர்ச்சியை ஆதரிக்க எம்.எஸ்.எம்.இ தொழில் முனைவோருக்கான ஓவர் டிராஃப்ட் மற்றும் டிமாண்ட் கடன் வழங்கப்படும்.
7.25 சதவீத போட்டி வட்டி விகிதம் ஈபிஎல்ஆருடன் (EBLR) இணைக்கப்பட்டுள்ளது
எளிய மதிப்பீடு (Simple Assessment)
இருப்புநிலை தேவையில்லை (No balance sheet required)
எஸ்பிஐ எஸ்எம்இ தங்க கடன் பெறுவதற்கான தகுதி
தங்க ஆபரணங்கள் / நகைகள் வைத்து கடன் பெற விரும்பும் நபர்கள் எங்கள் வங்கியின் கடன் மற்றும் கடன் வாங்காத அலகுகள் தற்போதுள்ள எம்.எஸ்.எம்.இ பிரிவினர்களுக்கு (உரிமையாளர் மட்டும்) மட்டுமே வழங்கப்படும்.
பிரிவு மற்றும் கடை இயங்கும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
கணக்கு என்.பி.ஏ (NPA status) நிலையில் இருக்கக்கூடாது, இது குறித்து எஸ்பிஐ வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
எஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடன் எந்த இடையூறும் இல்லை.
இந்த கடன் பெறுவதற்கு எந்த நிதி ஆவணங்களும் தேவையில்லை.
அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தனி நபர் வருவாய் ஆவணம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த முறையில் கடன் பெற விண்ணப்பிக்கும்போது, எளிய ஆவணங்கள் போதுமானது. மேலும் இந்த விண்ணப்பத்திற்கு விரைவான அனுமதி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”