scorecardresearch

EPFO News: வீடு வாங்க… பிள்ளைகளை படிக்க வைக்க… உடனடி பணம்; திரும்ப செலுத்த வேண்டாம்!

Tamil Business Update : சம்பள ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் பங்களிப்பு வைத்து சேமிக்கும் நிதியாகும்

EPFO News: வீடு வாங்க… பிள்ளைகளை படிக்க வைக்க… உடனடி பணம்; திரும்ப செலுத்த வேண்டாம்!

EPFO News Update In Tamil : தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக திரும்பப் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத வகையில் பணம்பெற முன்கூட்டியே ஈபிஎஃப் –க்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) என்பது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) என்பது அரசாங்க ஆதரவு திட்டமாகும்.  இது சம்பள ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் பங்களிப்பு வைத்து சேமிக்கும் நிதியாகும். முன்னதாக, இந்த சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கு 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலாளி மற்றும் தொழிலாளர் ஒவ்வொரு மாதமும் தங்கள் பங்களிப்பை ஈபிஎஃப் ​​-க்கு டெபாசிட் செய்கிறார்கள். பொதுவாக, ஈபிஎஃப் கணக்கில் திரட்டப்பட்ட  தொகை ஓய்வூதியம் அல்லது ஊழியர்கள்  ராஜினாமா செய்யும்போது திரும்பப் பெறலாம். ஆனால் தற்போது ஈபிஎஃப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், பல்வேறு காரணங்களுக்காக திருப்பிச் செலுத்த அவசியம் இல்லாத வகையில், ஈபிஎஃப் அட்வான்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈபிஎஃப் உறுப்பினர்கள் பல்வேறு நன்மைகளைப் பெற, யூனிஃபைட் மெம்பர் போர்டல் (Unified Member Portal) அல்லது உமாங் ஆப் (UMANG) மூலம் திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத வகையில், ஈபிஎஃப் அட்வான்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது, ​​திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஈபிஎஃப் அட்வான்ஸ் தொகைக்கு ஒருவர் விண்ணப்பிக்கக் கூடிய காரணங்கள்:

வீட்டுக்கடன்/ தளம்/ வீடு/ மனை வாங்குவது அல்லது கட்டுமானம்/ சேர்த்தல், ஏற்கனவே உள்ள வீட்டை மாற்றுதல்/ வீட்டுக்கடன் திருப்பிச் செலுத்துதல்

தொழிற்சாலை மூடல், குடும்ப உறுப்பினரின் நோய், சுய/ மகன்/ மகள்/ சகோதரர்/ சகோதரி திருமணம்

குழந்தைகளின் மெட்ரிகுலேஷன் கல்வி, இயற்கை பேரிடர், மின்சாரம் துண்டிப்பு

உடல் ஊனமுற்றோர்க்கு உபகரணங்கள் வாங்குவது, ஓய்வுக்கு ஒரு வருடம் முன்பு

வரிஸ்தா பென்ஷன் பிமா யோஜனா (VPBY) இல் முதலீடு

ஒரு மாதத்திற்கு குறையாத வேலையின்மை மற்றும் தொற்றுநோய் (கோவிட் -19)

ஆகிய காரணங்களுக்காக ஈபிஎஃப்-ல் அட்வான்ஸ் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஈபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் ஈபிஎஃப் கணக்குகளில் இருந்து முன்கூட்டியே விண்ணப்பிப்பதன் மூலம் ஈபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை பெற முடியும். ஒருவேளை பணம் திரும்பப் பெறப்பட்டால், ஊழியர் தனது ஈபிஎஃப் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த முறையில் பணம் பெற ஊழியர் தங்களது ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை யுஏஎன் (UAN) உடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரும்பப் பெற விரும்பும் நபர், தனது ஈபிஎஃப் கணக்கிலிருந்து பணம் கேட்டு முன்கூட்டியே கேட்டு ஆணையருக்கு ஒரு விண்ணப்பத்தை எழுதலாம்.

திரும்பப் பெறுதல் விண்ணப்பத்தின் நகலை நேரடி மூலமோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம்.ஈபிஎஃஓ உறுப்பினர்கள் உமாங் (UMANG) பயன்பாட்டின் உதவியுடன் அதை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, epfindia.gov.in இல் அதிகாரப்பூர்வ EPFO ​​இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tamil business of alert in non refundable pf advance further reasons