பாஸ் புக், செக் புக் உடனே ரிட்டன் பண்ணுங்க: கஸ்டமர்களுக்கு 7 வங்கிகள் அதிரடி உத்தரவு

ஏப்ரல் 1-ந் தேதி முதல் வங்கி வடிக்கையாளர்கின் பாஸ்புக் மற்றும் காசோலை புத்தகங்கள் செயல்படாது என்று ஏழு வங்கிககள் அறிவித்துள்ளது.

2021 ஏப்ரல் 1 முதல், புதிய நிதியாண்டு தொடங்கவுள்ள நிலையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

2021-22 ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில், குறிப்பிட்ட ஏழு வங்கிகளின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளின் இந்த அறிவிப்பு வடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகளின் பாஸ் புக் மற்றும் காசோலை புத்தகம் ஏப்ரல் 1, 2021 முதல் செயல்படாது.

மேல் குறிப்பிட்ட இந்த ஏழு வங்கிகளும் வேறு பல வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதால் அந்த வங்கிகளின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும், பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திர வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பி.என்.பி, பாங்க் ஆப் பரோடா பிரச்சினை எச்சரிக்கை

இந்த வ்ங்கி இணைப்பின் காரணமாக காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் நிறுத்தப்படுவதாக பி.என்.பி மற்றும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த வங்கியின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் 2021 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும்,இந்த வங்கியின்  எம்.ஐ.சி.ஆர் குறியீடு, ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு போன்றவை 2021 ஏப்ரல் 1 முதல் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி), யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் தற்போதைய வாடிக்கையாளர்களுடன் தொடர்புடையது. இதேபோல், மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் வேறு எந்த வங்கியுடன் இணைக்கப்படுகிறார்களோ, அவர்கள் தங்கள் புதிய வங்கியைத் தொடர்புகொண்டு புதிய எம்ஐசிஆர் குறியீடு, ஐஎப்எஸ்சி  குறியீடு, காசோலை புத்தகம், பாஸ் புக் போன்றவற்றைப் பெற வேண்டும்.

சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளருக்கு நிவாரணம்

சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சிண்டிகேட் வங்கியின் தற்போதைய எம்.ஐ.சி.ஆர் குறியீடு, ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு, காசோலை புத்தகம், பாஸ் புக் போன்றவை 2021 ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று கனரா வங்கி ஏற்கனவே கூறியுள்ளது. எனவே, சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் வருகையால் பீதியடைய தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil business update bank customer return passbook and cheque books

Next Story
ஆன்லைனில் உடனடி இஎம்ஐ: யாரும் செய்யாத வசதி… ஐசிஐசிஐ அசத்தல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express