State Bank Of India Credit Card Customers Offer : எஸ்பிஐ வங்கி தனது கிரிடிட்கார்டு வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு ஹோட்டல்கள் முன்பதிவில் புதிய சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையானர்களுக்கு நாளுக்கு நாள் புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் பயணச் செலவுகளைச் சேமிக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு, உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்வதில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த எஸ்பிஐ கிரிடிட் கார்டு சலுகை இன்று வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ ஆப் பயன்படுத்தி யாத்ரா ஆப் மூலம் உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகளை பெற எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் எஸ்பிஐ யோனோ ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த அப்பில் உங்களது பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, யாத்ரா வலைத்தளத்திற்கு சென்று உள்நாட்டு விமானங்களையும், உள்நாட்டு ஹோட்டல்களையும் முன்பதிவு செய்யலாம்.
இதில் முன்பதிவு செய்யும்போது எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை செலுத்த வேண்டும். அப்போது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கான யாத்ரா கூப்பன் குறியீடு அல்லது விளம்பர குறியீடு (YTRSBI) கிடைக்கும். இந்த சலுகைகள் உள்நாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு ஹோட்டல்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகைகளில் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவில், அதிகபட்சம் ரூ .1000 வரையும், , உள்நாட்டு ஹோட்டல்களில் அதிகபட்சமாக ரூ .1,500 வரையும் சலுகைகள் பெறலாம். மேலும் உள்நாட்டு விமானங்களை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .4,000 ஆகவும், உள்நாட்டு ஹோட்டல்களை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .2,000 ஆகவும் இருக்க வேண்டும்.
இந்த சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ ஆகியவற்றில் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை ஆன்லைனில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளில் மட்டுமே செல்லுபடியாகும். இந்த சலுகைகள் ஒரு அட்டைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஹோட்டல்களில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகையை வாடிக்கையாளர்கள் யாத்திராவின் இணையதளத்தில் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே முழு கொள்முதல் செய்ய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”