SBI Gold Monetisation Scheme : இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியின் தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத தங்க நகைகளை வருமானம் தரக்கூடிய முதலீடாக மாற்றலாம் .
எஸ்பிஐ-யின் தங்கம் பணமாக்குதல் திட்டம்:
உங்கள் வீடுகளில் கிடக்கும் பயன்பாடற்ற தங்க நகைகளை சிறப்பாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு நல்ல வருமாணம் கிடைக்கும். உங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத அல்லது பயன்பாடற்ற நகைகளை தங்கம் பணமாக்குதல் திட்டம் (ஜிஎம்எஸ்) மூலம் பயன்படுத்தலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) உட்பட பல வங்கிகள் இந்த சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் தங்க வைப்புகளை (deposits) இந்திய அரசு சார்பாக எஸ்பிஐ ஏற்றுக்கொள்கிறது. மேலும் இந்த திட்டத்தில் விடுபட்ட காலத்திற்கும் வைப்புத்தொகை செய்யலாம்.
எஸ்பிஐ தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் அம்சங்கள்:
எஸ்பிஐ, ஜிஎம்எஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பயன்பாடற்ற தங்க நகைகளை இந்த திட்டத்தில் பயன்படுத்துவதன் மூலம் வட்டி வருமானத்தை ஈட்ட ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதில் குறுகிய கால வங்கி வைப்பு (எஸ்.டி.பி.டி) - ஒப்பந்தம் 1 முதல் 3 ஆண்டுகள் எனவும்,
நடுத்தர கால அரசு வைப்பு (MTGD) - ஒப்பந்தம் 5-7 ஆண்டுகள் எனவும்
நீண்ட கால அரசு வைப்பு (எல்.டி.ஜி.டி) ஒப்பந்தம் 12-15 ஆண்டுகள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்தபட்ச வைப்புத் தேவை 30 கிராம் (மொத்தம்), அதிகபட்ச அளவிற்கு வரம்பு இல்லை. இதில் தனிப்பட்ட பெயரில் ஒற்றை வைப்பு செய்ய நியமனம் வசதி உள்ளது.
எஸ்.டி.பி.டி.க்கு தற்போதைய வட்டி விகிதங்கள் :
1. 1 ஆண்டு வட்டி விகிதம் 0.5 சதவீதமாகவும்,
2. 1 வருடத்திற்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை வட்டி விகிதம் 0.55 சதவீதமாவும்,
3) 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை வட்டி விகிதம் 0.60 சதவீதவும் நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த அல்லாத (மார்ச் 31 அன்று) முதிர்ச்சிக்கான (முதிர்ச்சியில்) வட்டி. எஸ்.டி.பி.டி மீதான அசல் மற்றும் வட்டி தங்கத்தில் குறிப்பிடப்படும். விடுபட்ட காலத்திற்கான முதிர்வு வட்டிக்கும் செலுத்தப்படும்.
எம்டிஜிடி (MTGD) க்கு தற்போதைய வட்டி விகிதங்கள் 2.25 சதவீதமாக வழங்கப்படுகிறது.
மேலும் எம்டிஜிடி மற்றும் எல்.டி.ஜி.டி குறித்த விபரங்கள், அசல் தங்கத்தில் குறிப்பிடப்படும். இருப்பினும், வட்டி ஆண்டுதோறும் மார்ச் 31 அல்லது முதிர்வுக்கான ஒட்டுமொத்த வட்டி செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த நேரத்தில் விடுபட்ட கால வட்டியும் சேர்த்து செலுத்தப்படும்.
வைப்புத்தொகையின் போது, தங்க மதிப்பில் வட்டி ரூபாயில் கணக்கிடப்படுகிறது. டெபாசிட்டருக்கு ஆண்டுதோறும் எளிய வட்டி அல்லது முதிர்ச்சியின் போது ஒட்டுமொத்த வட்டி (கூட்டு) பெற விருப்பம் இருக்கும்
இது குறித்து நிபுணர் கூறுவது என்ன?
மிகவும் பழமையான பயன்படுத்தப்படாத நகைகள் நீங்கள் விரும்பிய வருவாயைக் கொடுக்காது. அதனால் பயன்பாடற்ற தங்க நகைகளை இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று தனிநபர் கடன் நிபுணர் ஜிதேந்திர சோலங்கி தெரிவித்துள்ளார்.. ஜி.எம்.எஸ் திட்டத்தின் கீழ் பயன்படுத்தினால் அதிக வருமானத்தை அளிக்காது என்று எச்சரித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு ஒரு பூட்டுதல் காலம் உள்ளது. எனவே பயன்படுத்தப்படாத தங்கம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் காலத்தை ஒருவர் காரணியாகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதிக அளவில் பல கோடி மதிப்புள்ள தங்கத்தை வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றுகூறியுள்ளா அவர், இந்த திட்டத்தை பயன்படுத்தினால் வட்டி வருமானம் உறுதியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.