State Bank Of India Online Banking : இந்தியாவின் மிக்ப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும் முயற்சியில் அவர்களின் வங்கி கணக்கிற்கு பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. மேலும் மோசடி கும்பல்களிம் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு குறித்தும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளித்து வருகிறது.
இந்த வகையில் எஸ்பிஐ தற்போது மீண்டும் ஒரு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியாள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களின் வங்கி பணபரிவர்த்தனைகளை பாதுகாக்கும் முயற்சியில் இந்த புதிய அம்சத்தை அறிவித்துள்து. இதில் வடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் எடுக்கும்போது ஒன் டைம் கடவுச்சொல் (ஓடிபி) கொடுக்க வேண்டிய அம்சத்தை பெறலாம்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எஸ்பிஐ இந்த ஓ.டி.பி (OTP) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த அமசத்தின் மூலம் மோசடி கும்பலிடம் இருந்து வாடிக்கயாளர்களின் பணம் பாதுகாப்பாக வைக்கவும், உங்கள் கணக்கில் மற்றொரு பாதுகாப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது.
"கூடுதல் பாதுகாப்பிற்காக ஓ.டி.பி (OTP) அடிப்படையில் எஸ்பிஐ ஆன்லைன் உள்ளே நுழைந்தவுடன் எஸ்பிஐ ஆன்லைன் வங்கியை பாதுகாப்பானதாக்குகிறது. இப்போது உங்கள் வீட்டில் இருந்தபடியே நிங்கள் வங்கி கணக்கை பாதுகாப்புடன் பயன்படுத்தலாம் என்று என்று நாட்டின் உயர்மட்ட கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அம்சத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் மொபைல் தொலைபேசியில் ஒரு எச்சரிக்கையை பெற நீங்கள் விரும்பினால், உங்கள் எஸ்பிஐ கணக்கிற்கு உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைப்பது அவசியம்.
SBI makes online banking safer you with our OTP based login for added security. Now bank carefree from the comfort of your home.
Get started: https://t.co/8O47eWN4yG#SBI #OnlineSBI #SafeBanking pic.twitter.com/a6mVjwjYjJ— State Bank of India (@TheOfficialSBI) April 23, 2021
எஸ்பிஐயில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது?,
உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி எஸ்பிஐயின் ஆன்லைன் இணையதளத்தில் உள்ளே நுழைய வேண்டும்.
அடுத்து ‘எனது கணக்குகள் & சுயவிவரம்’ (My accounts & profile)என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
உயர் பாதுகாப்பு கடவுச்சொல்’ இணைப்பைக் கிளிக் செய்து சுயவிவர கடவுச்சொல்லைப் பயன்படுத்தி,( Profile Password) அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
அடுத்த பக்கத்தில், இதற்கான சில பாதுகாப்பு விருப்பங்கள் உங்களுக்குக் காண்பிக்கப்படும்:
உள் அல்லது வங்கிகளுக்கு இடையேயான பயனாளி கட்டணம், கிரெடிட் கார்டு அல்லது ஐ.எம்.பி.எஸ் அல்லது சர்வதேச நிதி பரிமாற்றம் ஆகியவற்றைக் கொண்ட பரிவர்த்தனைகள்:
இதில் நீங்கள் 'ஆம்' என்பதைத் தேர்ந்தெடுத்தால், எல்லா பரிமாற்றங்களுக்கும் OTP கிடைக்கும். நீங்கள் ‘இல்லை’ என்பதைத் தேர்வுசெய்தால், ஒரு நாளில் மொத்தமாக ரூ .10,000 வரை பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் எந்த ஓடிபி (OTP) ஐப் பெற மாட்டீர்கள்.
வணிக நிறுவனங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகள்:
இந்த விஷயத்தில் நீங்கள் ஒ.டி.பி (OTP – SMS) எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல், ஸ்டேட் வங்கி பாதுகாப்பான ஒ.டி.பி (OTP) (மொபைல் பயன்பாடு) ஆகியவற்றைப் பெற விரும்பும் பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒ.டி.பி (OTP) முறையைப் பயன்படுத்தி உயர் பாதுகாப்பு கடவுச்சொல் உங்கள் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளில் ஒரு பரிமாற்றத்தை வைத்திருக்க உதவும்.
இந்த ஒ.டி.பி (OTP-) அடிப்படையிலான ஏடிஎம் மிஷினில், பணத்தை திரும்பப் பெறும் வசதி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம்களில் இருந்து ரூ .10,000 மற்றும் அதற்கு மேல் திரும்பப் பெற அனுமதிக்கிறது. இதில் கூடுதல் பாதுகாப்பு நோக்கத்திற்காக, ஜனவரி 1, 2020 முதல் செயலில் இருந்த இந்த சேவை செப்டம்பர் 2020 முதல் நாள் முழுவதும் கிடைக்கிறது.
இதற்கிடையில், கடன் வழங்குபவர் தனது மொபைல் வங்கி பயன்பாடான யோனோவில் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அடிப்படையிலான சேமிப்புக் கணக்கு திறப்பு அம்சத்தையும் எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த முயற்சி, தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற (Paperless) செயல்முறையாகும் என்று வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.