PM Kisan Scheme New Update : பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தற்போது, பிரதமர் மோடி அரசின் மிக வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. விவசாய சமூகத்திற்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் தற்போது சுமார் 12 கோடி பயனாளிகள் உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ 6000 நிதி உதவி அளித்து வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணைகளில் விழங்கப்படும் இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 8 தவணைகள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 9 வது தவணையை வழங்க அரசு தயாராகி வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பிரதமர் கிசானின் பயனாளியாக இருந்தால் அல்லது இந்தத் திட்டத்தில் சேர நினைத்தால், இந்த மாற்றங்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பிரதமர் கிசான் யோஜனாவில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள்
நில உரிமையாளர் வரம்பு இல்லை
தொடக்கத்தில், 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என்று இருந்த்து. ஆனால் இந்தியாவில் 14.5 கோடி விவசாயிகளும் இத்திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது மோடி அரசு நிலம் வைத்திருக்கும் வரம்பை நீக்கியது.
ஆதார் அட்டை கட்டாயம்
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், உங்களிடம் சரியான ஆதார் எண் இருக்க வேண்டும். ஆதார் இல்லாமல், நீங்கள் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய முடியாது. பயனாளிகளுக்கு அரசு ஆதார் கட்டாயமாக்கியுள்ளது.
சுய பதிவு வசதி
அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் கிடைக்கும் சுய பதிவு விருப்பத்தின் மூலம் விவசாயிகள் தங்களை இத்திட்டத்தில் பதிவு செய்யலாம். உங்களிடம் ஆதார் அட்டை, மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் நில விவரங்கள் இருந்தால், விவசாயிகள் pmkisan.nic.in என்ற முகவரியில் சென்று எளிதாக பதிவு செய்யலாம்.
நிலையை சரிபார்க்க வசதி
பிரதமர் கிசான் போர்ட்டலில் பயனாளிகளின் நிலையை சரிபார்க்க அரசாங்கம் ஒரு புதிய அம்சத்தைச் வழங்கியுள்ளது. உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, இதுவரை நீங்கள் எவ்வளவு தவணை பெற்றுள்ளீர்கள் என்பதை இந்த அம்சத்தின் மூலம் சரிபார்க்கலாம்.
பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பிரதமர் மந்தன் யோஜனாவின் கூடுதல் நன்மைகளைப் பெறமுடியும்
இப்போது கிசான் கிரெடிட் கார்டும் (கே.சி.சி) பிரதமர் கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசானின் பயனாளிகள் கே.சி.சி.க்கு விண்ணப்பிப்பது எளிதானது. மேலும் விவசாயிகளுக்கு கேசிசி மூலம் ரூ .3 லட்சம் வரை 4 சதவீதம் கடன் கிடைக்கும். அதே நேரத்தில், பிரதமர்-கிசான் சம்மன் நிதியின் பயனைப் பெறும் ஒரு விவசாயி பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கும்போது எந்த ஆவணத்தையும் வழங்க வேண்டியதில்லை. இந்த திட்டத்தின் கீழ், பிரதமர்-கிசான் திட்டத்திலிருந்து பெறப்படும் சலுகைகளிலிருந்து விவசாயிகள் நேரடியாக பங்களிக்க தேர்வு செய்துகொள்ள வசதி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil