2021-22 நிதியாண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு

Tamil Business Update : 2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

Tamil ITR Filling Update : 2021-22  நிதியாண்டுக்கான  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 30-ந்தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டு தோறும் ஜூலை மாதம் இறுதியில் வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாள் அறிவிக்கப்படும். அதன்படி கடந்த ஜூலை 31-ந் தேதி 2021-22 ம் ந்தே ஆண்டிற்கான வருவாய் தாக்கல் செய்ய இறுதிநாளாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ், 2021 செப்டம்பர் 30 வரை நீடித்து உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 3 மாதங்கள் நீடிக்கப்பட்டு டிசம்பர் 31 கடைசி நாளாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களால் ஒரு கணக்காளரிடமிருந்து அறிக்கையை வழங்குவதற்கான காலக்கெடு, முந்தைய ஆண்டு 2020-21 வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 92E இன் கீழ் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை காலக்கெடு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2021-22 நிதியாண்டிற்கான தாமதமான/திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை வழங்குவதற்கான கடைசி தேதி இப்போது ஜனவரி 31, 2022 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய ஐடிஆர் போர்ட்டலில் உள்ள பல தொழில்நுட்ப சிக்கல்கள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படுவதாகவும், 2020-21 நிதியாண்டுக்கான 1.19 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானரித்துறை குறிப்பட்டுள்ளது.

ஐடிஆர் போர்ட்டலில்  உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 23 அன்று இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த  ஆகஸ்ட் 23 அன்று இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி யை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போர்டல் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த குறைபாடுகள் உள்ளதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் இந்த சிக்கல்களை தீர்க்க இன்போசிஸுக்கு செப்டம்பர் 15 வரை காலக்கெடுவை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டில், இன்போசிஸ் அடுத்த தலைமுறை வருமான வரி தாக்கல் முறையையும் திருப்பிச் செலுத்துவதற்கான நேரத்தை 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைக்கும் என்றும், பணத்தைத் திரும்பப்பெறவும் ஒரு ஒப்பந்தமும் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2021 வரை, போர்ட்டலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இன்போசிஸுக்கு ரூ .164.5 கோடியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil income tax return extended till december 31 for 2021 22

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com