Advertisment

IRCTC Job: வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ80,000 வரை சம்பாதிக்கலாம்; ரயில்வே தரும் வாய்ப்பு!

IRCTC Jobs Update : டிக்கெட் முகவர்கள் தட்கல், காத்திருப்பு பட்டியல் முதல் ஆர்ஏசி (RAC) வரை அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம்

author-image
WebDesk
New Update
IRCTC Job: வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ80,000 வரை சம்பாதிக்கலாம்; ரயில்வே தரும் வாய்ப்பு!

கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு முகவராக மாறுவதன் மூலம் நீங்கள் மாதம் ரூ .80,000 வரை நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

Advertisment

ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, கேட்டரிங் சேவைகள் ஆகியவற்றுடன் இந்திய ரயில்வேயைக் கையாள்கிறது. இந்திய இரயில்வேயில் ன்பதிவு செய்யப்படும் மொத்த டிக்கெட்களில் 55% ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்படுவதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இதன் மூலம், கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்பும் ஒருவர் ஐஆர்சிடிசி- உடன் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக மாறி ரூ .80,000 வரை சம்பாதிக்கலாம்.

டிக்கெட் முகவர்கள் தட்கல், காத்திருப்பு பட்டியல் முதல் ஆர்ஏசி(RAC) வரை அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். ஒவ்வொரு முன்பதிவு மற்றும் பரிவர்த்தனைக்கும் அவர்களுக்கு நல்ல கமிஷன் வழங்கப்படுகிறது.

ஐஆர்சிடிசி முகவராக நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

ஒரு ஐஆர்சிடிசி ஏஜெண்டாக, ஏசி அல்லாத வகுப்பில் பிஎன்ஆர் ஒன்றுக்கு ரூ .20 கிடைக்கும்.

ஏசி வகுப்பைப் பொறுத்தவரை, ஒரு பிஎன்ஆருக்கு ரூ. 40 கிடைக்கும்

மேலும், ஒரு ஐஆர்சிடிசி முகவர் பரிவர்த்தனை தொகையில்  ரூ .2,000 க்கும் மேல் மதிப்புக்கு 1%, மற்றும் 0 ரூ .2,000 –க்கு கீழ் வரை பணம் செலுத்தும்போது .75% நுழைவுக்கட்டனம் பெறலாம்.

ஒரு ஐஆர்சிடிசி முகவர் ஒரு மாதத்தில் பல டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். ஒவ்வொரு முன்பதிவு மற்றும் பரிவர்த்தனைக்கும் தனித்தனியான கமிஷனைப் பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இதில் ஒரு முகவராக, நீங்கள் மாதத்திற்கு ரூ .80,000 வரை பெறலாம். மந்தமான நாட்களில், ஒருவர் மாதத்திற்கு ரூ. 40-50,000 வரை பெற முடியும்

அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி முகவரால் பெறக்கூடிய வசதிகள்:

வரம்பற்ற டிக்கெட் முன்பதிவு

அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் மொத்தமாக பதிவு செய்யலாம்

பொது முன்பதிவு நேரம் திறந்த 15 நிமிடங்களுக்குள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்

எளிதான ரத்து செயல்முறை மற்றும் கொள்கை

அனைத்து வகையான முன்பதிவுகளும் அனுமதிக்கப்படுகின்றன: ரயில், விமானம், பஸ், ஹோட்டல், விடுமுறை நாட்கள், அந்நிய செலாவணி, மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ், ஆகிய முறைகளை பயன்படுத்தலாம்.

ஏஜெண்டுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு ஆன்லைன் கணக்கு வழங்கப்படும்

ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஐஆர்சிடிசி-யின் அங்கீகரிக்கப்பட்ட இணைய சேவை வழங்குநரிடமிருந்து ஐஆர்சிடிசி முகவர் உரிமத்துடன் தொழில்முறை மற்றும் நட்பு ஆதரவு சேவைகளையும் பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு முகவருக்கான திட்டங்கள்:

ஒரு வருட ஏஜென்சிக்கு, ஒரு ஏஜெண்டுக்கு ரூ .3,999 வசூலிக்கப்படும்.

இரண்டு வருட நிறுவனத்திற்கு, ஒரு முகவர் ரூ .6,999 வசூலிக்கப்படும்.

ஒரு முகவர் அதிகபட்சமாக 100 டிக்கெட்டுகளை பதிவு செய்தால் டிக்கெட்டுக்கு ரூ .10 கட்டணம் வசூலிக்கப்படும்.

அதிகபட்சமாக 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ .8 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மாதத்திற்கு 300 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ .5 வசூலிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி முகவராக மாறுவதற்கு தேவையான படிகளைப் பார்க்கவா?

முதலில், பதிவு படிவத்தை ஆன்லைனில் நிரப்பவும்.

ஒரு விண்ணப்பதாரர் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பு படிவத்துடன் தங்கள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை அனுப்ப வேண்டும்.

ஆவணங்களின் சரிபார்ப்பு முடிந்தவுடன், ஐஆர்சிடிசி ஐஆர்சிடிசி ஐடியை உருவாக்க ரூ .1,180 டெபாசிட் செய்யும்படி உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்

ஒடிபி மற்றும் வீடியோ சரிபார்ப்புக்குப் பிறகு உங்களுக்காக ஒரு டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும்.

நீங்கள் டிஜிட்டல் சான்றிதழைப் பெற்ற பிறகு, ஐஆர்சிடிசி கட்டணத்தை டெபாசிட் செய்யும்படி கூறப்படும்

கட்டணம் டெபாசிட் செய்யப்பட்டவுடன், ஐஆர்சிடிசி உங்கள் சான்றுகளை உங்களுக்கு அனுப்பும்.

வாழ்த்துக்கள்! நீங்கள் இப்போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment