/tamil-ie/media/media_files/uploads/2020/10/sitharaman-5.jpg)
Tamil Nadu gets nod to borrow extra
Tamil Nadu to borrow Rs 9,627 crore : தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை) ஈடுசெய்ய மாநில அரசு வெளிச்சந்தையில் கடன் வாங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசைக் கோரியிருந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சரிக்கட்ட வெளிச்சந்தையில் மாநில அரசுகள் கடன் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இதேபோல் அனுமதி கேட்டிருக்கின்றன. தமிழகத்துடன் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் 78 ஆயிரத்து 542 கோடி ரூபாய் கடனாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் 20 மாநிலங்கள் ஏற்கனவே இதன் மூலமாக தங்களுக்கு எந்தெந்த தொகைக்கு அனுமதி வேண்டும் என்பதை மத்திய நிதியமைச்சகத்துக்கு தெரிவித்து அனுமதி பெற்றிருந்தன. அந்த வகையில் தற்போது தமிழகத்துக்கும் 9,627 கோடி ரூபாய் கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே ரிசர்வ் வங்கி மூலமாக கடன் திரட்டுவதற்கு தமிழக அரசுக்கு உதவி செய்யும். ஏற்கனவே மொத்தம் 21 மாநிலங்களுக்கு 78,452 கோடி ரூபாய் கடன் திரட்டுவதற்காக அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது. மேலும் உள்ள மாநிலங்களும் இதே வசதியை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது, தமிழக அரசு இறுதி முடிவை எடுத்து 9,627 கோடிக்கு மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இந்த கடன் தொகை, அதற்கான வட்டி இரண்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி படி நஷ்டயீடு கூடுதல் வரி மூலமாக சரிக்கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு கடன் வாங்க முடியாது. இது, மத்திய அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும்.தங்கள் எதிர்கால ஜி.எஸ்.டி., வரி வசூலின் அடிப்படையில், மாநில அரசுகள் கடன் பெறலாம். மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு, 21 மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன என்று சென்ற வாரம் ஜிஎஸ்டி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.