அரசு ஊழியர் சம்பளம் டூ மானிய திட்டம்; ரூ.1-ல் தமிழக அரசின் செலவுகள்!

தொடர்ந்து மூலதன செலவு, வட்டி செலுத்துதல் முறையே 11, 13 பைசா செலவிடப்படுகிறது.

Tamil Nadu Budget 2023
தமிழ்நாட்டின் செலவுகள் ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக நிதி அமைச்சசர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத்தின் நிதி நிலை அறிக்கையை இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தஞ்சை சோழர் அருங்காட்சியகம், 21 மொழிகளில் பெரியார் நூல்கள் மொழிபெயர்பு என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

தற்போது இந்தப் பட்ஜெட்டின் மொத்த செலவுகளை ஒரு ரூபாயில் பார்க்கலாம். அந்த வகையில், மொத்த செலவு ரூ.1 ஆகும். இதில் கடன் வழங்குதல், கடன்களை திருப்பி செலுத்துதல் முறையே 3 மற்றும் 11 பைசா செலவிடப்படுகிறது.

தொடர்ந்து மூலதன செலவு, வட்டி செலுத்துதல் முறையே 11, 13 பைசா ஆக உள்ளது. மானியம் மற்றும் உதவித் தொகை திட்டங்களுக்கு 30 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பராமரிப்பு திட்டங்களுக்கு 4 பைசாவும், ஓய்வூதிய மற்றும் இதர திட்டங்களுக்கு 9 பைசாவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக 19 பைசாவும் செலவிடப்படுகிறது.

இதேபோல் வருமான அடிப்படையில் டாஸ்மாக், அரசு தொழிற்சாலைகள் வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government expenditure on rs1

Exit mobile version