/indian-express-tamil/media/media_files/2025/10/14/editn-emarket-2025-10-14-15-54-35.jpg)
இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை விற்க ஒரு வழியை வழங்குகிறது. Photograph: (Image Source: Instagram/ edii_tn)
குறு, சிறு தொழில்முனைவோரின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க இணைய வழியில் புதிய ஆன்லைன் சந்தையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை விற்க ஒரு வழியை வழங்குகிறது.
தொழில்முனைவோரின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க இணைய வழியில் புதிய ஆன்லைன் சந்தையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் [EDII-TN], குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது
இந்த இணையவழி சந்தையில், தொழில்முனைவோர் தங்கள் சொந்த முத்திரையுடன் தங்கள் தயாரிப்புகளை உலகளவில் விற்க ஒரு வழியை வழங்குகிறது. சந்தையில் "பயன்படுத்த எளிதான" டேஷ்போர்டு, எளிய பதிவேற்ற நடைமுறைகள், வாடிக்கையாளர்களுடன் நேரடி இணைப்பு போன்ற அம்சங்களும் உள்ளன.
உயர்தர உணவுப் பொருட்கள், அழகுப் பொருட்கள், வீட்டு பராமரிப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ஹார்டுவேர்ஸ், கைவினைப் பொருட்கள், வீடு மற்றும் அலுவலகப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், எழுதுபொருட்கள், ஜவுளிப் பொருட்கள், பைகள், கம்பளங்கள், பரிசுப் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், விவசாயப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவற்றை நுகர்வோர் இந்த இணையவழி சந்தையில் வாங்கலாம்.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், புதிய ஆன்லைன் சந்தையின் சிறப்பம்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு :
1) சிறு/குறு விற்பனையாளர்களுக்கு எளிய பதிவேற்ற முறைகள்.
2) தரமான பொருட்களை நியாயமான விலையில் நேரடியாக பெறுதல்.
3) சிறு தொழில்முனைவோரை ஆதரித்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குதல்
விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்வரும் இணையவழி சந்தையில் தங்களை பதிவு செய்துகொள்ளலாம்,
https://marketplace.editn.in/
தொடர்பு எண் : 9444459448 / 8668101901
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது.” என்ரு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.