சோலார் மின் உற்பத்தியில் தமிழகம் முன்னோடி.. செல்லப்பன் தகவல்

சோலார் மின் உற்பத்தி மற்றும் விழிப்புணர்வில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட் சோலார் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்லப்பன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu is a pioneer in solar power generation
ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட் சோலார் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்லப்பன் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மார்டன் சோலார் மின்சார உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி ஆலையில் 700 மெகா யூனிட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல்கள் தயாரிக்க உள்ளனர். ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம் நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செல்லப்பன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் பொருத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த நிறுவனம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் அதே போல பல்வேறு நிறுவனங்களுக்கு சோலர் மின்சாரம் விற்பனையும் செய்கிறோம் இதற்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
மேலும் கோவை மாவட்டம் மோட்டார் உற்பத்தியில் முன்னிலையாக இருப்பது போல தற்போது சோலார் பேனல் உற்பத்தியிலும் முன்னிலையில் இருக்கும் வகையில் இந்த மார்டன் சோலார் உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது.

இது, அதிநவீன தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மக்களிடம் தற்போது சோலார் பேனலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அரசு கொள்கை முடிவும் சாதகமாக இருந்தால் அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவித்த அவர்
இந்தியாவிலே தமிழகம் சோலார் மின் உற்பத்தி மற்றும் விழிப்புணர்வில் முன்னோடி மாநிலமாக உள்ளது எனவும் தமிழகம் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பாலன், இயக்குனர்கள் நாச்சியப்பன், ரகுநாத், மிருளாயினி என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu is a pioneer in solar power generation

Exit mobile version