தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முதல் பங்கு விற்பனை (IPO) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.500-525க்குள் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.
மெர்க்கண்டைல் வங்கி 1.58 கோடி பங்குகள் வெளியிட திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக இன்று (செப்.5-07) முதல் வரையிலான 3 நாள்களுக்குள் ரூ.831.6 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில் 75 சதவீதம் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாதோரிடம் இருந்தும் 10 சதவீதம் சிறு முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீடு திரட்டப்படும்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. இந்த வங்கி மொத்தம் 509 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது. அதில், 106 கிளைகள் கிராமப் புறத்திலும், 247 கிளைகள் கிராமங்கள் அல்லாத வளரும் நகர்புறத்திலும், 80 நகர்புறத்திலும், 76 மெட்ரோ நகரங்களிலும் உள்ளன.
இந்த வங்கியில் பெரும்பாலான வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் 5 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கை பராமரித்து வருபவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முதல் பங்கு விற்பனை தொடர்பான முக்கிய தகவல்கள்
- பங்கு விற்பனை செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது.
- செப்.7ஆம் தேதியோடு 3 நாள்களுக்கான பங்கு விற்பனை நிறைவுபெறும்.
- முதல் பங்கு செப்டம்பர் 12ஆம் தேதி ஒதுக்கப்படும்.
- ஐபிஓ ரிபண்ட் செப்.13ஆம் தேதி தொடங்கும்.
- ஐபிஓ இறுதிகட்ட ஒதுக்கீடு செப்.14ஆம் தேதி நடைபெறும்.
- ஐபிஓ செப்.15ஆம் தேதி பட்டியலிடப்படும்.
நிறுவனத்தின் முதல் பங்கில் பல்வேறு விதிமுறைகள் உண்டு. இந்தப் பங்குகளை முதல் ஓராண்டு விற்பனைக்கு பயன்படுத்த முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil