/indian-express-tamil/media/media_files/2025/03/29/HNcyefjFW4sSP4bjx6vA.jpg)
கோவையின் பெருமைகளை கூறும் விதமாகவும் கோவையின் தொழில் முன்னேற்றத்திற்கு பயனளிப்பதோடு சர்வதேச அளவில் கோவையின் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல ஊக்கமளிப்பதற்கான கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர்" விருது வழங்கப்பட்டது.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயமுத்தூர் அட்வர்டைசர்ஸ் கிளப் இணைந்து தொழில்துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் சாதனையார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் செல்வாக்கு மிக்க வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் லெகசி பிராண்ட் விருது பிரீமியர் மில்ஸ் குழுமத்திற்கும்,ஐகானிக் பிராண்ட் விருது கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனம்,மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதே போல கே.எம்.சி.எச்.மருத்துவமனைக்கு பிராண்ட் அம்பாசிடர் விருதும்,பிராமினன்ஸ் விண்டோ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு எமர்ஜிங் பிராண்ட் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.வி.எஸ்.சப்ளை செயின் சொல்யூசன்ஸ் குழுமத்தின் தலைவர் தினேஷ் விருதுகளை அந்தந்த நிறுவனத்தின் தலைவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர் இது போன்ற கோவையின் பெருமைகளை கூறும் விதமாக வழங்கப்படும் விருதுகள் கோவையின் தொழில் முன்னேற்றத்திற்கு பயனளிப்பதோடு சர்வதேச அளவில் கோவையின் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல ஊக்கமளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை ராஜேஷ் லுந்த், கோயமுத்தூர் அட்வர்டைசர்ஸ் கிளப் தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில்,வனிதா மோகன்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன்,செல்வம் ஏஜன்சீஸ் நந்தகுமார்,கிருஷண்ராஜ் வானவராயர், கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி.நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயமுத்தூர் அட்வர்டைசர்ஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.