பூ வரத்து குறைவு : ரூ 2 ஆயிரத்தை கடந்த 1 கிலோ மல்லிகைப்பூ விலை

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூ வரத்து குறைவு : ரூ 2 ஆயிரத்தை கடந்த 1 கிலோ மல்லிகைப்பூ விலை

பி.ரஹ்மான். கோவை

Advertisment

கோவை பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 2 ஆயிரத்திற்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை, ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது.

இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை, முல்லை, அரளி, குண்டுமல்லி, ரோஜா, செவ்வந்தி என பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

Advertisment
Advertisements

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

publive-image

குறிப்பாக மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது. ஆனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கோவை பூமார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மற்ற பூக்களும் ஓரளவு விலை உயர்ந்து காணப்பட்டது.

கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:- செவ்வந்தி-ரூ.60 முதல் ரூ.120 வரையும், ரோஜா ரூ.120 முதல் ரூ.160 வரையும், கோழிப்பூ-ரூ.40, அரளி-ரூ.200, சம்பங்கி-ரூ.120, வாடாமல்லி-ரூ.80, மரிக்கொழுந்து 1 கட்-ரூ.40, காக்கடைபூ ரூ.400, துளசி-ரூ.40, தாமரை ஒன்று ரூ.15க்கும் விற்பனையாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: