/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 1120 அதிகரித்து 83 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ10430-ககும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஒரு கிராம் 70 ரூபாய், மாலையில் ஒரு கிராம் 70 ரூபாய் என இரண்டு முறை உயர்ந்துள்ளது. இது போன்ற நிலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் ஆனால் ("Value Edition Goods") விற்பனை நடைபெறாது என தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர் சங்க செயலாளர் சுரபி கார்த்திக் கூறுகையில், தற்போது, அபரிவிதமாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. பட்டறைகளில் பாதிப்புகள் இருக்கிறது. ஆனால் முதலீட்டில் தங்கம் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. பலரும் இதன் விலை லட்சத்தை தொடும் என்பதால் தங்க கட்டிகள் வெள்ளி கட்டிகளாக வாங்கி வருகின்றனர்.
வேல்யூடி எடிஷன் குட்ஸ் (Value Edition Goods) விற்பனை செய்து வந்தால் தான் பொருளாதார நன்றாக இருக்கும். ஆனால் அவற்றை விற்பனை செய்யவே முடியவில்லை. தங்கத்தின் விலை ஏறி வருவதால் தான் அதனை வாங்குகிறார்களே தவிர அதனை மதிப்பாக பார்பதில்லை. டிராரிஃப் ரேட் 50% அறிவித்ததில் இருந்து நாட்டிற்குள் வரும் டாலர் குறைவாக உள்ளது. டாலர் மதிப்பு அதிகமாக வருகிறது. அதன்படி வெள்ளியில் மதிப்பும் உயரும். தீபாவாளி போன்ற பண்டிகையின் போதும் விலை உயரும். தற்போது மக்கள் வெள்ளி வாங்குவதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனவே மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/22/surabi-karthik-2025-09-22-23-16-08.jpeg)
மேலும், தங்கத்தின் விலையும் காலையில் ஒரே விலை மாலையில் ஒரு விலை என மாறும் போது அதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அதனால் பொதுமக்கள் நினைக்கின்ற அளவு தங்கத்தை விட குறைவாகவே வாங்கி செல்வதாகவும் டிராபிஃப் பிரச்சனை ஒருபுறம் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை ஒருபுறம் இஸ்ரேல் பிரச்சனை ஒரு பக்கம் என்று மாறி மாறி பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பதால் நிலைத்தன்மை சரியாக இருக்காது எனவும்
தங்கத்தில் முதலீடு செய்வது தற்போதைக்கு நல்லது என தெரிவித்தார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் இந்த விஷயத்தில் அவதிப்படுகின்றனர்., நடுத்தர மக்கள் 9 கேரட், 14 கேரட், 18 கேரட் ஆகிவற்றை பயன்படுத்த பழக வேண்டும் அதுவும் தங்கம் தான். அதை மட்டமான தங்கம் என்று எண்ணாமல் அதற்கான விலை தான் நிர்ணையிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட் கூறுகையில், காலையில் இருந்து மாலைக்குள் 35 டாலர் டிராய் ஹவுன்ஸ்க்கு கூடியுள்ளது டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இந்த விலைக்கு காரணம் உலக வர்த்தகம் வெள்ளிக்கிழமையன்று விலையேற்றத்துடன் முடிந்து இன்று காலை இந்திய மதிப்பு வீழ்ச்சி ஆகவும் இது நுகர்வோரிடம் மிகப்பெரிய அச்ச நிலையை உருவாக்கி இருக்கிறது. தங்கத்தின் விலை இறங்குவதற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது ஆனால் ஏற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/22/muthu-venkat-2025-09-22-23-16-08.jpeg)
அமெரிக்கா விசாவிற்கு அதிகமான பணத்தை நிர்ணயித்துள்ளதும் நல்லது என கருத முடியாது. உலக சந்தையில் ஆசிய நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளார்கள். தங்கத்தின் வரவை விட தேவைகள் அதிகமாகி வருகிறது. அதனால் விலையும் நாளுக்கு நாள் ஒரு புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. தங்கத்தின் விலையின் எல்லையை கண்டுபிடிக்க முடியாதுடாலர் 4000 வரும்போது தங்கத்தின் விலை ஒரு பவுன் 1 லட்சத்து 2000 ரூபாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
இரு தினங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சரை சந்தித்து இறக்குமதி வரியை ஆறு சதவிகிதத்தில் இருந்து இரண்டு சதவிகிதம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜி.எஸ்.டி யை 3% 1.5% ஆக்க வேண்டும் என்று கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். தற்போது எங்களுக்கு 15 சதவிகிதம் தான் வியாபாரம் இருக்கிறது. 200 டன் நகைகளை செய்ய வேண்டிய வாய்ப்பு எங்களுக்கு உள்ளது ஆனால் இந்த நிலை நீடித்தால் ஒரு வருடத்திற்கு 50 டன் தான் செய்ய முடியும் அதனால் 60% இருக்காது என்று கூறினார்.
தற்போது நாங்கள் தயாரித்துள்ள நகைகளை விற்பனை செய்ய முடியவில்லை என்றால் நாங்கள் வட்டி கட்ட முடியாது என்றும் மிகப்பெரிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் நுகர்வோர் அவர்களிடம் உள்ள சேமிப்பில் ஒரு பகுதியை தங்கத்தை வேண்டும் என்றும் அரசும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.