வரி விதிப்பு பதட்டம்... வரலாறு காணாத அளவு சரிந்த ரூபாய்: ரிசர்வ் வங்கி பின்வாங்குவது ஏன்?

அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 88-க்கும் கீழ் சென்று புதிய வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தலையிடாமல் இருப்பது ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 88-க்கும் கீழ் சென்று புதிய வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தலையிடாமல் இருப்பது ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
RBI

வரி விதிப்பு பதட்டம்... வரலாறு காணாத அளவு சரிந்த ரூபாய்: ரிசர்வ் வங்கி பின்வாங்குவது ஏன்?

அமெரிக்காவின் கடுமையான வரிக் கொள்கையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 88-க்கும் கீழே சென்று புதிய வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது. ஆனாலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சரிவை கட்டுப்படுத்த பெரிய அளவில் தலையிடாமல் இருப்பது ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக, ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்த தயக்கம் காட்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்ற அச்சம், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுதல் போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு 88 என்ற நிலையை முதன்முறையாக தாண்டியது. ஆக.27 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஏற்றுமதி பொருட்களின் மீது 50% கூடுதல் வரி விதித்ததால், ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அந்நிய செலாவணி சந்தை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பால், ரூபாய் மதிப்பு சற்று குறைந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என ரிசர்வ் வங்கி நினைக்கலாம். எனவே, வரிவிதிப்பின் தாக்கத்தை சமாளிக்க, ரூபாய் மதிப்பின் இந்த சிறிய சரிவை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டிருக்கலாம்” என்றார்.

ரூபாய் மதிப்பு குறையும்போது, ஏற்றுமதியாளர்களின் பொருட்கள் வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு மலிவாகக் கிடைப்பதால், சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டித் தன்மை அதிகரிக்கிறது. இந்த ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்காவின் வரிவிதிப்பின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்யும். இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $690.72 பில்லியன் என வலுவாக இருப்பதால், பெரும் வெளிப்புற அதிர்ச்சிகளை தாங்கும் திறனுடன், ரூபாய் மதிப்பை படிப்படியாகவும், கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் குறைய அனுமதிக்க ரிசர்வ் வங்கிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisment
Advertisements

ஆக.29 அன்று, ரூபாய் மதிப்பு வர்த்தகத்தின் இடையே 88.31 என்ற நிலைக்கு சரிந்து, இறுதியில் 88.20 என்ற புதிய சரிவில் முடிந்தது. செப்.1 அன்று, மீண்டும் 88.20 என்ற அளவில் முடிவடைந்த ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே 88.33 என்ற வாழ்நாள் சரிவை தொட்டது. பின், செவ்வாய்க் கிழமை அன்று, 87.84 என்ற நிலைக்கு உயர்ந்தாலும், இறுதியில் 88.16-ல் நிலைபெற்றது. கடந்த 3 வர்த்தக நாட்களில் ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் இருந்ததால், ரிசர்வ் வங்கியின் தலையீடு குறைவாகவே இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனிப்பு

அந்நிய செலாவணி சந்தையில் பங்கேற்பாளர்கள், ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஏற்றத்தாழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறுகின்றனர். உதாரணமாக, 87.80 என்ற நிலையில் ரிசர்வ் வங்கி தலையிட்டாலும், ரூபாய் மதிப்பு 88-ஐ தாண்டியதும், அது மேலும் குறைய அனுமதித்தது.

ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி சந்தையில் அதன் தலையீடுகள், குறிப்பிட்ட மாற்று விகிதத்தை இலக்காகக் கொள்ளாமல், அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என தொடர்ந்து கூறிவருகிறது. ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஜிகர் திரிவேதி, “கடந்த வாரம் 88 என்ற முக்கியமான நிலையை ரூபாய் தாண்டியபோது, ரிசர்வ் வங்கி வலுவான தலையீட்டை மேற்கொள்ளாமல், ஊக வணிகர்களின் டாலர் தேவை காரணமாக ரூபாய் மதிப்பு மேலும் குறைய அனுமதித்தது, வர்த்தகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது,” என்றார்.

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கரன்சி, கமாடிட்டீஸ் மற்றும் இன்ட்ரஸ்ட் ரேட் டெரிவேடிவ்ஸ் பிரிவின் தலைவர் அனிந்தியா பானர்ஜி, “வர்த்தகப் போர் நடக்கும்போது, நாணயம் ஒரு ஆயுதமாகிறது. ஏனெனில், ஏற்றுமதியாளர்களை முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். ரூபாய் மதிப்பு சரிவின் வேகத்தை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி தலையிடும். ஆனால், கடந்த காலத்தில் செய்தது போல் மிகவும் ஆக்ரோஷமாக இருக்காது,” என்றார்.

மெக்லாய் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திப்தி சிடாலே, தற்போதைய வர்த்தகப் பதட்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை, நாட்டின் ஏற்றுமதி போட்டித்தன்மையை பராமரிக்க ரூபாய் மதிப்பு குறைவது அவசியமாக இருக்கலாம். அமெரிக்கா போன்ற முக்கிய வர்த்தகப் பங்குதாரர், வரியில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இந்த அணுகுமுறை விவேகமானதாகத் தோன்றுகிறது என தெரிவித்தார்.

ரூபாய் மதிப்பு குறைய வாய்ப்பு

சந்தை பங்கேற்பாளர்கள், குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பு 87.50 முதல் 88.50 வரையிலான வரம்பில் வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கின்றனர். ரூபாய் மதிப்பு 88.50-ஐ தாண்டி சரிந்தால், விரைவில் 89.90 அல்லது 90 என்ற நிலையை எட்டலாம்.

கரூர் வைஸ்யா வங்கியின் கருவூல தலைவர் வி.ஆர்.சி ரெட்டி, “வரிவிதிப்பில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் வரை, அடுத்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாய் மதிப்பு 89.90-க்கு குறையலாம்” என்றார். வர்த்தகப் போர் தீவிரமடைந்தால், ரூபாய் மதிப்பு 90-க்கும் கீழே செல்லக்கூடும். இருப்பினும், அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வை எட்டினால், ரூபாய் மதிப்பு 86 என்ற நிலைக்கு மீண்டு வர வாய்ப்புள்ளது.

எல்.கே.பி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜாதீன் திரிவேதி, ஜிஎஸ்டி குறைப்பு குறித்த இந்தியாவின் நடவடிக்கை, நுகர்வை ஆதரித்து, வரிவிதிப்பின் எதிர்மறை விளைவுகளை ஓரளவு ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இருப்பினும், வரிவிதிப்புக்கு ஒரு தீர்வு கிடைத்தால், ரூபாய் மதிப்புக்கு நிவாரணம் கிடைக்கும் என ரெட்டி கூறினார். மேலும், ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை திடீரென சரிந்துவிட அனுமதிக்காது என்றும், திடீர் வீழ்ச்சியைத் தடுக்க அதன் அந்நிய செலாவணி கையிருப்பை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: