கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓசூரில் ரூ. 3,051 கோடி மதிப்பீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி இதே ஆலையில் 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை டாடா முன்னெடுத்தது.
அதனடிப்படையில், ரூ. 3,699 கோடி முதலீட்டில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்படிருந்தது. அவ்வாறு விரிவாக்கம் செய்தால் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கான அனுமதியை வழங்கி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“