மின்சார வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை.. டாடா கார்கள் பிப்.1 முதல் எவ்வளவு உயரும்?

டாடா கார்கள் விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எஸ்.யூ.வி. கார்கள் 1.2 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளது.

Tata Motors to hike cars SUVs prices from February 1 2023
டாடா கார்கள் விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், அதன் ICE (உள் எரிப்பு இயந்திரம்) வகை பயணிகள் வாகனங்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு பிப்ரவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. நிறுவனத்தின் படி, மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து சராசரி விலை உயர்வு 1.2 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாகனங்களை பாதிக்காது

டாடா மோட்டார்ஸின் ICE பயணிகள் வாகனங்களின் விலைகள் பிப்ரவரி 1, 2023 முதல் 1.2 சதவீதம் வரை விலை உயரும். இருப்பினும், இந்த விலை உயர்வு நிறுவனத்தின் மின்சார வாகன (EV) வரிசையை பாதிக்காது.
மும்பையை தளமாகக் கொண்ட இந்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு காரணமாக சமீபத்திய விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tata motors to hike cars suvs prices from february 1 2023

Exit mobile version