Advertisment

பட்ஜெட் விலையில் தெறி மாடல்; டாடா பஞ்ச் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

டாடா பஞ்ச் எலக்ட்ரானிக் கார்கள் இன்று (ஜன.17) அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் கார்களின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.1449 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Tata Punch EV launch expected in October What to expect

டாடா பஞ்ச் எலக்ட்ரானிக் கார்கள் இன்று அறிமுகமாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00
  • இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா புதிய ரக எலக்ட்ரானிக் கார்களை இன்று (ஜன.17,2024) அறிமுகப்படுத்தியது. இந்தக் கார்கள் 5 ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    அவை,
  • ஸ்மார்ட்
  • ஸ்மார்ட் பிளஸ்
  • அட்வென்சர்
  • எம்பவர்டு
  • எம்பவர்டு ப்ளஸ் ஆகும்.
Advertisment

இந்தக் கார்களின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.14.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் 360 கேமரா வசதிகளும் உள்ளன.

கார்கள் ஜன.22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன. இந்தக் கார்களை ரூ.21 ஆயிரம் செலுத்தி வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துக் கொள்ளலாம்.

மேலும் இந்தக் கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளள. டாடாவின் புதிய Gen-2 Pure EV இயங்குதளமான Acti.EV ஐப் பயன்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக அதிக வலிமை கொண்ட பொருட்களுடன் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SUVயின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மிமீ மற்றும் ராம்ப்-ஓவர் கோணங்களில் பராமரிக்கிறது. SUV இன் பரிமாணங்கள் அதன் ICE அல்லது CNG பரிமாணங்களில் இருந்து மாறாமல் உள்ளது.

ஆனால் இது இப்போது நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது LED பகல்நேர விளக்குகள், மெலிதான LED ஹெட்லைட்கள், மூடிய கிரில் மற்றும் புதிய 16-இன்ச் அலாய் வடிவமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கார் விலைகள்

  1. பஞ்ச் EV ஸ்மார்ட்: ₹10.99 லட்சம்
  2. பஞ்ச் EV ஸ்மார்ட்+: ₹11.49 லட்சம்
  3. பஞ்ச் EV அட்வென்ச்ர்: ₹11.99 லட்சம்
  4. பன்ச் EV எம்பவர்டு: ₹12.79 லட்சம்
  5. பஞ்ச் EV எம்பவர்டு +: ₹13.29 லட்சம்
  6. பஞ்ச் EV LR அட்வென்ச்ர்: ₹12.99 லட்சம்
  7. பஞ்ச் EV LR எம்பவர்டு+: ₹14.49 லட்சம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment