Advertisment

டாடா ஸ்கை பேக்கில் புதிய மாற்றங்கள்! ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு தெரிந்துக் கொள்ளுங்கள்

போட்டி போட்டுக் கொண்டு பிளான்களையும் ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tata sky recharge offer

tata sky recharge offer

tata sky recharge offer : இந்தியாவில் டிடிஎச் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இருப்பது டாட்டா ஸ்கை. டிடிஎச் துறை தற்போது, இந்தியாவில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பிளான்களையும் ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனம் தற்போது, புதிய பிளானையும் அறிவித்துள்ளது. டாடா ஸ்கை செட்டாப் பாக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகைளயும் வழங்கி வருகின்றது. இதில் தற்போது, டாடா ஸ்கை புதிய பிளான்களையும் அறிவித்து மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு முன்னாள் இந்த ஆஃபரில் 11 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால், 1 மாதம் கூடுதல் சேவை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதுவரை நீங்கள் மொத்தமாக ரீசார்ஜ் செய்து வந்ததில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேக்குகளின் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதுக் குறித்த விவரத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தி பேசிக் பேக்கில் அறிவித்துள்ள மாற்றங்கள். இந்தி பேக் இப்போது மொத்தம் 77 சேனல்களுடன் ரூ .191.16 என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த பேக் 74 சேனல்களுடன் விலை ரூ .181.72 ஆக இருந்தது. இரண்டாவது மாற்றம்ஃபேமிலி கிட்ஸ் பேக்கில் 91 சேனல்களை ரூ .216.82 க்கு வழங்குகிறது. இது 90 சேனல்கள்களுடன் இதற்கு முன்பு ரூ .213.28 ஆக இருந்தது.

மூன்றாவது அறிவிப்பு, டாடா ஸ்கை பெங்காலி இப்போது இந்த பேக் 74 சேனலை ரூ .191.16 விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு  72 சேனல்களை ரூ .181.72 விலையில் வழங்கியது. கடைசி மாற்றம் மராத்தி இந்தி பேசிக் பேக்கில். இது இப்போது 72 சேனல்களை ரூ .194.70 க்கு வழங்குகிறது. இதற்கு முன்பு 70 சேனல்களை ரூ .185.26 க்கு வழங்கப்பட்டது.

Tata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment