Air India and Vistara Merger: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மற்றும் டாடா சன்ஸ் செவ்வாய்க்கிழமை (நவ.29) ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்க ஒப்புக்கொண்டதாக அறிவித்தன.
இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீத பங்குகளை ஏர் இந்தியாவில் ரூ 2,058.5 கோடி ($250 மில்லியன்) முதலீட்டில் பெறுகிறது.
இந்த 25.1 சதவீத பங்குகள் விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா குழுவில் இருக்கும். அதில் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இருக்கும்.
மேலும் அனைத்து விமான நிறுவனங்களின் இணைப்பும் மார்ச் 2024 க்குள், ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் இணைப்பு ஏர் இந்தியாவை உண்மையான உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்றுவதற்கான எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்.
குழு ஏற்கனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவை ஒரு நிறுவனமாக இணைக்கும் செயல்பாட்டில் உள்ளது, இது குறைந்த கட்டண விமான விருப்பங்களை வழங்கும்.
ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், நாங்கள் ஏர் இந்தியாவை மாற்றுகிறோம்.
மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா அதன் நெட்வொர்க்-ஐ வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் வாடிக்கையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் செயல்திறனை மேம்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் முழு சேவை மற்றும் குறைந்த கட்டண சேவைகளை வழங்கும் வலுவான ஏர் இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil