இந்தியாவின் மிகவும் மலிவு விலை மின்சார கார்களாக டாடா மோட்டார்ஸின் Tiago EV உள்ளது.
இந்தக் கார்களின் விலை தற்போது திருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் அனைத்து வகை கார்களின் விலையும் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டாடா டியாகோ எலெக்ட்ரானிக் விவரம்
பேட்டரி | சார்ஜர் | வகை | ஆரம்ப விலை | புதிய விலை |
19.2 kWh | 3.3 kW AC | XE | 8.49 Lakh | 8.69 Lakh |
19.2 kWh | 3.3 kW AC | XT | 9.09 Lakh | 9.29 Lakh |
24 kWh | 3.3 kW AC | XT | 9.99 Lakh | 10.19 Lakh |
24 kWh | 3.3 kW AC | XZ+ | 10.79 Lakh | 10.99 Lakh |
24 kWh | 3.3 kW AC | XZ+ Tech LUX | 11.29 Lakh | 11.49 Lakh |
24 kWh | 7.2 kW AC | XZ+ | 11.29 Lakh | 11.49 Lakh |
24 kWh | 7.2 kW AC | XZ+ Tech LUX | 11.79 Lakh | 11.99 Lakh |
இது குறித்து, டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை வியூகத்தின் தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில், “முதல் நாளிலேயே 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும், ஒரு மாதத்திற்குள் 20,000 முன்பதிவுகளை எட்டியதன் மூலம் இந்தியாவில் மிக வேகமாக முன்பதிவு செய்யப்பட்ட EV ஆனது Tiago EV தான்” என்றார்.
Tiago EV ஆனது 19.2 kWh மீடியம்-ரேஞ்ச் பதிப்பு மற்றும் 24kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்-களுடன் கிடைக்கிறது.
மேலும், Tiago EV ஆனது 15A பிளக் சாக்கெட், 7.2 kWh AC ஹோம் வால் பாக்ஸ் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் போன்ற வசதிகளை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/