Passport Issue Time Changed: தட்கல் பாஸ்போர்ட் பெறுவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை! இந்தியாவில், சாதாரண சூழ்நிலையில் மக்கள் 11 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெறுகிறார்கள் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. அப்போது ஒரு நாளுக்குள் தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டை அதிகாரம் மிகுந்த ஆவணமாகக் கூறிய மத்திய அரசு, ஊழல் மற்றும் பாஸ்போர்ட்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் முயற்சியில், 731 மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் காவல்துறை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள், 412 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மற்றும் 93 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் உள்ளன எனவும் முரளீதரன் அதில் குறிப்பிட்டிருந்தார்.
சாதாரண பாஸ்போர்ட்டை வழங்குவதற்கான கால அளவு 11 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ‘தட்கல்’ பிரிவின் கீழ் பாஸ்போர்ட்டுகள் ஒரு நாளுக்குள் வழங்கப்படுகின்றன என்றும் முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களை இயக்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவில்லை எனவும் விளக்கினார்.
வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியாவின் அனைத்து குடிமக்களும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் படி, மத்திய அரசு பல்வேறு வகை பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை வழங்க முடியும்.
தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான பாஸ்போர்ட் சேவாவில், வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசு, தட்கல் பாஸ்போர்ட், இவற்றிற்கு போலீஸ் சரிபார்ப்பு தேவையில்லை, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியைத் தவிர்த்து ஒருநாளுக்குள் இந்த மாதிரியான பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இ-ஃபார்ம்களை பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள், இ-ஃபார்மின் சாஃப்ட் காப்பியை டவுன்லோடு செய்து, அதை ஆஃப்லைனில் நிரப்ப வேண்டும். பின்னர் அதை பூர்த்தி செய்து மீண்டும் பதிவேற்ற வேண்டும். இ-ஃபார்மின் பிரிண்டெட் காப்பி இதில் ஏற்றுக்கொள்ளப்படாது. சாஃப்ட் காப்பியை டவுன்லோடு செய்யவிரும்புபவர்கள், https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/online/downloadEFormStatic என்ற தளத்தை விசிட் செய்யவும். இந்த படிவங்களைத் திறந்து நிரப்ப நீங்கள் பயன்படுத்தும் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் அக்ரோபேட் ரீடரின் (9 அல்லது அதற்கு மேற்பட்ட) சமீபத்திய பதிப்பு இருக்க வேண்டும் என்பதை தனிநபர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.