New PPF rule | SCSS | மத்திய அரசு பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. இதில், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் நேர வைப்புத் திட்டம் ஆகியவை வருகின்றன.
பிபிஎஃப்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முன்கூட்டியே கணக்குகளை மூடுவது குறித்து சில மாற்ஙங்களை அரசு செய்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தை பொது வருங்கால வைப்பு நிதி (திருத்தம்) திட்டம், 2023 என்று அழைக்கலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மூத்தக் குடிமக்கள் சிறு சேமிப்புத் திட்டம்
புதிய விதியின் படி, ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்ட தேதிக்கான சான்றுகள் கிடைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தனிநபர் ஒருவர் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டம்
ஐந்தாண்டு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது, கணக்கு துவங்கிய நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி செலுத்தப்படும்.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, ஐந்தாண்டு கால வைப்புத்தொகை கணக்கு வைப்புத் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டால், மூன்று வருட கால வைப்புத்தொகை கணக்கிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வட்டி விகிதம் வட்டியைக் கணக்கிடுவதற்குப் பொருந்தும்.
அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
வ.எண் | திட்டங்கள் | வட்டி (%) |
01 | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) | 7.1% |
02 | மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) | 8.2% |
03 | செல்வமகள் சேமிப்பு திட்டம் | 8.0% |
04 | தேசிய சேமிப்பு சான்றிதழ் | 7.7% |
05 | மாதாந்திர வருமானத் திட்டம் | 7.4% |
06 | கிஷான் விகாஸ் பத்ரா | 7.5% |
07 | ஓராண்டு டெபாசிட் | 6.9% |
08 | இரண்டாண்டு டெபாசிட் | 7.0% |
09 | 3 ஆண்டு டெபாசிட் | 7.0% |
10 | 5 ஆண்டு டெபாசிட் | 7.5% |
11 | 5 ஆண்டு ஆர்.டி | 6.7% |
வரிச் சலுகை
இந்தத் திட்டங்களில் பலவற்றில் நீங்கள் செய்யும் முதலீடு வரிச் சலுகை உண்டு. இவை பொதுவாக வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விலக்குகளாகும்.
தகுதியான சில பொதுவான திட்டங்கள் SCSS மற்றும் PPF ஆகும். இந்தத் திட்டங்களில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரை பலன்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.