குஷ்பு நாராயண்:
tax filers : 2016-17 நிதியாண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு வருமான வரிக்கணக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 மடங்கு குறைந்ததாக, அதாவது அந்த நிதியாண்டில் சுமார் 88 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இப்படி ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்கள், அடுத்து வரும் ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2015 - 16-ல் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 8.56 லட்சம் பேர் மட்டுமே 2015 - 16-ல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. ஆனால் 2016 - 17-ம் ஆண்டில் ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்தவர்களில் 88.04 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக கூறப்படுவது மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் வேலை இழப்பு குறைந்ததாகவும், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதால் பலரும் வருமான வரி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டங்களில் புதிதாக வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் வந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 2012-13 நிதியாண்டில் 37 லட்சமாகவும், 2013-14-ல் 27 லட்சமாகவும் குறைந்திருந்தது இதையும் நாம் இந்த இடத்தில் கவனிக்க தவற விடக்கூடாது. வருமான துறையினர் வெளியிட்டுள்ள தகவல்களில், அவர்கள் கூறியிருக்கும் காரணம் சரியாக பொருந்தவில்லையா? என்ற சந்தேகத்தை எழுப்பும் படி அமைந்துள்ளது.
வருமான வரித்துறையின் வெளியிட்ட அறிக்கையில் நாம் 2 விஷயங்களை தெளிவாக கவனிக்க வேண்டும். ஒன்று அதில் ’ஸ்டாப் ஃப்ல்லர்ஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாப் ஃப்ல்லர்ஸ் குறித்த ஆதரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் முயற்சி மூலம் வருமான வரித்துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/2-1-300x214.jpg)
இரண்டாவது வருமான வரித்துறையினர் 2016 ஆம் ஆண்டு நிதியாண்டில் ஸ்டாப் ஃப்ல்லர்ஸ் அல்லது நான் ஃபல்லர்ஸ் என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இங்கு வெறும் ஸ்டாப் ஃப்ல்லர்ஸ் குறித்து மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை இந்த ஸ்டாப் ஃபல்லர்ஸ் என்ற வார்த்தை பல்வேறு நேரங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை வரையிலும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
வரி துறையில் உள்ள ஆதாரங்களின் படி, "ஸ்டாப் ஃபல்லர்ஸ்" எண்ணிக்கை பின்வரும் படிகளில் கணக்கிடப்படுகிறது:
1. ஆண்டின் தொடக்கத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை
2. ஆண்டில் புதிய வரி செலுத்துவோர் எண்ணிக்கை.
3. வரி செலுத்துவோர் எண்ணிக்கை (1) இல் இருந்து 'கைவிடப்பட்டது'
4. வருடாந்திர வரி செலுத்துவோர் எண்ணிக்கை: 1 + 2-3
5. (4) நபர்களின் எண்ணிக்கை, அவர்களில் வரி வருமானம் தாக்கல் செய்தவர்கள்
6. தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யாத நபர்களின் எண்ணிக்கை ('stop filters') (4-5)
மேலும் விளக்கினால், வருமான வரித்துறை 2016- 17 ஆம் ஆண்டு நிதியாண்டில் ட்ராப் ஃப்ல்லர்ஸ் விபரம் என்று 28.3 லட்சம் கூறுகிறது. இவர்களை தனி நபராக கணக்கில் கொண்டால் கடந்த 3 ஆண்டுகளில் இவர்கள் வருமான வரிதாக்கல் செய்யவில்லை.