/indian-express-tamil/media/media_files/2025/02/01/45OI1ruizgNFW8EAchFn.jpg)
தாராளமயமாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை திட்டத்தின் (எல்.ஆர்.எஸ்) கீழ் வசூலிக்கப்படும் வரிக்கான (டி.சி.எஸ்) வரம்பை, ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்துள்ளார். மேலும், கல்விக்காக அனுப்பப்படும் பணத்தில் 0.5 சதவீத டி.சி.எஸ் கடன் மூலம் நிதியளிக்கப்படுவதையும் ரத்து செய்ய அவர் முன்மொழிந்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Tax threshold on overseas remittances hiked to Rs 10 lakh from Rs 7 lakh; for education, TCS removed if funded by loan
டி.சி.எஸ் வசூலிப்பதற்கான வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிப்பது, பயணம் மற்றும் அன்னியச் செலாவணி துறைகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுலா, கல்வி மற்றும் விமான சேவைத் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கருதப்படுகிறது.
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ், சிறார் உட்பட குடியுரிமை பெற்ற தனிநபர்கள், அனுமதிக்கப்பட்ட நடப்பு அல்லது மூலதனக் கணக்குப் பரிவர்த்தனைகளுக்காக ஒரு நிதியாண்டில் 2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை இலவசமாக அனுப்பலாம். இந்த பரிவர்த்தனைகளில் கல்வி, வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை, சொத்து வாங்குதல் மற்றும் வெளிநாட்டு பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.
கிரிசில் ரேட்டிங்ஸ் இயக்குனர் பூனம் உபாத்யாய், "எல்.ஆர்.எஸ் இன் கீழ் பணம் அனுப்பும் மூல வரம்பில் வசூலிக்கப்படும் வரியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவது பயணம் மற்றும் அந்நிய செலாவணி துறைகளுக்கு பயனளிக்கும். இதனால் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறும் நபர்களும் பயனடைவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 2024 இல் எல்.ஆர்.எஸ் இன் கீழ் வெளிச்செல்லும் பணம் 31.735 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவில் இருந்து பணம் அனுப்புவதற்கான முதன்மை ஆதாரமாக பயணமானது உருவெடுத்துள்ளது, இது நிதியாண்டு- 14 இல் வெறும் 1.5 சதவீத பங்கிலிருந்து 17 பில்லியன் டாலராக 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நிதியாண்டு 24 இல் மாணவர்களின் பணம் 3.47 பில்லியன் டாலர்களாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.