Income Tax Return for AY 2022-2023: கடந்த 1ம் தேதி அன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி வருமானத்தின் மீது 30% வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்தியாவில் ஆர்.பி.ஐ. பிட்காய்ன்கள் அல்லது கிரிப்டோகரன்சியை வெளியிடும் என்றும் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் கூறினார். இந்தியாவில் கிரிப்டோகரன்சி செல்லுபடியாகுமா ஆகாதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நிம்மதி அளித்துள்ளது.
இந்த புதிய விதியானது நடப்பு நிதி ஆண்டில் ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். வர இருக்கும் ஏப்ரல் 1, 2022 முதல் கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கப்பட்ட வருவாய்க்கே 2023-2024 ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டும்.
இதனை தவிர்க்க வழிகள் ஏதேனும் உள்ளதா?
இந்த விதியானது வருகின்ற ஏப்ரல் 1,2022-ம் ஆண்டு முதல் ஆரம்பமாவதால் நீங்கள் உங்களிடம் இருக்கும் கிரிப்டோ கரன்சியை விற்பனை செய்து கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு நீங்கள் 30% வரி செலுத்த வேண்டியதில்லை.
இதற்கான விதிகள் இன்னும் உருவாக்கப்படாத காரணத்தால், இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயை, ஐ.டி.ஆர் மற்றும் மதிப்பாய்வு அலுவலர்களின் மதிப்பாய்வுக்கு பிறகு குறிப்பிட்டுக் கொள்ள இயலும்.
கிரிப்டோவிலிருந்து வரும் வருமானத்திற்கு ஒருவர் மார்ச் 31க்கு முன் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு முதலீட்டாளர்களை பொறுத்து மாறலாம். ஆனால் நிச்சயமாக 30% வரி செலுத்த வேண்டியதில்லை என்பது உறுதி. லாபத்தை முன்பதிவு செய்து 30% வரியைத் தவிர்க்க விரும்பினால், சிறிய கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜூலை 2022 முதல், கிரிப்டோ பரிமாற்றங்களுக்கான 1% டிடிஎஸ் விதியும் அமலுக்கு வரும். இது கிரிப்டோ பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வரித் துறை எளிதாக்கும்.
115BBH பிரிவை அறிமுகப்படுத்த பட்ஜெட் 2022-ல் முன்மொழியப்பட்டது. இது எந்த ஒரு டிஜிட்டல் சொத்தை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும். மேலும் அதில் ஏற்பட்ட செலவுக்கும் அல்லது இழப்புக்களுக்கும் எந்த வித விலக்கும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil