Advertisment

7.25% வட்டியில் பிக்சட் டெபாசிட்… வரி சேமிப்பில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

மூத்த குடிமக்களுக்கு வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில், பல்வேறு வங்கிகள் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 1.5 லட்சம் முதலீட்டில் ஒவ்வொரு வங்கிகளில் கிடைக்கும் மொத்த தொகையும் பட்டியலிப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
7.25% வட்டியில் பிக்சட் டெபாசிட்… வரி சேமிப்பில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

ஒவ்வொருவருக்கும் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதுவே, வரி சேமிப்புடன் முதலீட்டு திட்டங்கள் கிடைத்தால் வரப்பிரசாதம் தான். அத்தகை டபுள் நன்மை, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் கிடைக்கின்றன. முதியவர்களுக்கான வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பான சிறந்த முதலீடு ஆகும். இதன் மூலம், முதியோர்களுக்கான நிரந்தரமான வருமானம் கிடைத்திடும்.

Advertisment

முந்தைய காலத்தில், வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி குறைவாக இருந்தாலும், தற்போது பல்வேறு வங்கிகள் போட்டிப்போட்டு கொண்டு வட்டி வகிதங்களை அதிகரித்து வருகின்றன.

வரி-சேமிப்பு FD-களில் முதலீடு செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரியைச் சேமிக்கலாம். அவர்கள் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால் இந்த எஃப்டிகளுக்கு 5 வருட லாக்-இன் காலம் உள்ளதால், முன்கூட்டியே திரும்பப் பெறுதல் மற்றும் எஃப்டிகளுக்கு எதிரான கடன்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை என்று பாங்க்பஜார் கூறுகிறது.

மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு FDகளில் 0.50% அதிக வட்டி விகிதங்களைப் பெறலாம். அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. பல வரி-சேமிப்பு FD திட்டங்கள் கூட்டுக் கணக்குகளின் விருப்பத்தை வழங்குகின்றன, ஆனால் முதன்மை கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

இருப்பினும், முதலீட்டாளரின் ஸ்லாப் விகிதத்தின்படி FD வருமானத்தில் TDS அப்ளை செய்யப்படும். ஆனால், மூத்த குடிமக்கள் வங்கியில் படிவம் 15H-ஐ சமர்ப்பித்து இதைத் தவிர்க்கலாம். புதிதாக சேர்க்கப்பட்ட I-T சட்டத்தின் 80TTB பிரிவின் கீழ் டெபாசிட்களின் வட்டி வருமானத்தில் ரூ. 50,000 கூடுதல் வரி விலக்கு பெறலாம்

முக்கிய விஷயம் என்னவென்றால், எந்த வங்கி அதிக வட்டி வழங்குகிறது என்பதை சரிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும், வட்டி விகிதம் மாறக்கூடும்.

நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, வரி சேமிப்பு FDகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், கீழே உள்ள அட்டவணை முக்கிய வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் உள்ளது. அதுதவிர, ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 1.5 லட்சம் முதலீட்டில் ஒவ்வொரு வங்கிகளில் கிடைக்கும் மொத்த தொகையும் பட்டியலிப்பட்டுள்ளது.

publive-image
publive-image

இந்த வட்டி விகிதம், 15 மார்ச் 2022 அன்று அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் ஏற்றப்பட்ட தரவுகள் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment