மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் ஒரு தனிநபர் பெறும் வெற்றி பணப் பரிசுகளில் இருந்து வரியை எப்படி கழிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் 2023 பட்ஜெட்டில் ஆன்லைன் கேம்களில் இருந்து பெறப்படும் வருமானம் மீதான டிடிஎஸ்ஸைக் கழிப்பதற்கான வரம்பை அரசாங்கம் வெளியிட்ட பின்பு வந்துள்ளன.
சமீபத்திய அறிவிப்பின்படி, ஆன்லைன் கேம் நிறுவனங்கள், ஆன்லைன் கேமை வெல்வதன் மூலம் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயிலும் TDS-ஐக் கழிக்க வேண்டும். இந்த விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்த வகையில், முந்தைய நிதியாண்டு (FY 2022-23) வரை, ஒரு நிதியாண்டில் வெற்றித் தொகை ரூ. 10,000க்கு மேல் இருந்தால் ஆன்லைன் கேம்களின் வெற்றிகளுக்கான டிடிஎஸ் பொருந்தும்.
தற்போது TDS ஆனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194BA இன் கீழ் கழிக்கப்படும். ஆன்லைன் கேம்களின் வெற்றிக்கான TDS விகிதம் பிரிவு 194BA இன் கீழ் 30% ஆகும்.
உதாரணமாக ஆன்லைன் கேமில் ரூ.1500 வெற்றிப் பெற்றால் வரி 30 சதவீதம் ரூ.450 டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“