கால காப்பீடு (டேர்ம் இன்ஷூரன்ஸ்) மற்றும் ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) ஆகியவற்றுக்கு இடையே எதை தேர்வு செய்யலாம் என்றும், இவற்றுக்கான வேறுபாடுகள் குறித்தும் இப்பதிவில் விளக்கமாக காணலாம்.
ஆயுள் காப்பீடு என்பது பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாமல், நிதிச் சொத்தாகவும் செயல்படுகிறது. ஒருவரது உழைப்பை நம்பி மட்டுமே குடும்பத்தினர் இருந்தால், அவர்களுக்கு ஆயுள் காப்பீடு இன்றியமையாததாக கருதப்படுகிறது. எனினும், கால காப்பீடு (டேர்ம் இன்ஷூரன்ஸ்) மற்றும் ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) ஆகியவற்றுக்கு இடையே எதை தேர்வு வேண்டும் என பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.
கால காப்பீடு எடுத்துக் கொண்டவர்களுக்கு, பாலிசி காலத்தின் போது உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களின் பயனாளிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தொகையை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், பாலிசி காலத்தை கடந்து விட்டால் அதற்கான பணப்பலன்கள் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இதனால், ஆயுள் காப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போது, கால காப்பீடுகளுக்கு குறைவான பிரீமியம் இருக்கிறது.
கால காப்பீட்டின் முக்கிய நன்மைகள்:
பாலிசிதாரர்கள் குறைந்த பிரீமியங்களுக்கு அதிக கவரேஜ் தொகைகளைப் பெற கால காப்பீடு திட்டம் அனுமதிக்கிறது. உதாரணமாக, வயது மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து, மாதாந்திர பிரீமியமாக ரூ. 500-1,000-க்கு ரூ. 1 கோடி காப்பீட்டைப் பெறலாம்.
கால காப்பீடு திட்டங்கள், கூடுதல் சேமிப்பு அல்லது முதலீட்டு கூறுகள் இல்லாமல் காப்பீட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பிரீமியங்கள் மலிவு விலையில் இருக்கும்.
காலக் காப்பீட்டின் குறைபாடுகள்:
இதில் முதிர்வு தொகை இல்லாததால், பாலிசிதாரர் பாலிசி காலத்தில் உயிர் பிழைத்தால், பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனை சிலர் குறையாக கருதலாம்.
பொதுவாக, டேர்ம் பிளான்கள் 40 ஆண்டுகள் வரை அல்லது பாலிசிதாரர் 75 ஆண்டுகள் அடையும் வரை வழங்கப்படுகின்றன. அதன் பிறகு புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்படாமலோ கவரேஜ் நிறுத்தப்படும்.
ஆயுள் காப்பீட்டு
'ஆயுள் காப்பீடு' என்ற சொல் பெரும்பாலும் முழு ஆயுள் பாலிசிகள் மற்றும் எண்டோவ்மென்ட் திட்டங்களைக் குறிக்கிறது, இது காப்பீட்டுத் தொகையை முதலீடு அல்லது சேமிப்புக் கூறுகளுடன் இணைக்கிறது. அதாவது, இந்த பாலிசிகள் முதிர்வுப் பலனை வழங்குகின்றன. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், எண்டோவ்மென்ட் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் பாலிசிகள், உத்தரவாதமான பேஅவுட்டை வழங்குகின்றன. மேலும், நீண்ட கால சேமிப்புத் திட்டங்களாக இவை அமைகிறது.
ஆயுள் காப்பீட்டின் முக்கிய நன்மைகள்:
முதிர்வு நன்மை: ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பாலிசி காலம் வரை நீங்கள் இருந்தாலும், காப்பீடு மற்றும் முதலீட்டுத் தயாரிப்புகள் ஆகிய இரண்டையும் ஈர்க்கும் வகையில் பே-அவுட்டை வழங்குகின்றன.
சேமிப்புக் கூறு: இது காலப்போக்கில் பண மதிப்பைக் குவிக்கின்றன. இது ஒரு நிதி சொத்தாக செயல்படும்.
வரி பலன்கள் மற்றும் கடன்கள்: இதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் கடன் வாங்கலாம். மேலும், இவை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகின்றன.
ஆயுள் காப்பீட்டின் குறைபாடுகள்:
அதிக பிரீமியங்கள், குறைந்த கவரேஜ்: ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியங்கள் பொதுவாக டேர்ம் இன்சூரன்ஸை விட அதிகமாக இருக்கும். மேலும், அதே பிரீமியம் தொகைக்கான டேர்ம் இன்சூரன்ஸுடன் ஒப்பிடும்போது, காப்பீட்டுத் தொகை பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, ரூ. 1 கோடி டேர்ம் கவரேஜ் அளிக்கும் பிரீமியம், ரூ.10-ரூ. 20 லட்சம் வரையிலான வாழ்நாள் காப்பீட்டை மட்டுமே அளிக்கும்.
குறைந்த வருமானம்: மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பிற முதலீட்டு வழிகளுடன் ஒப்பிடும்போது வருமானம் குறைவாக இருக்கும்.
எதை நீங்கள் தேர்வு செய்யலாம்?
Bankbazaar.com இன் தலைமை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி இது குறித்து விவரித்துள்ளார். “தங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, மலிவு விலையில், அதிக கவரேஜ் தேடுபவர்களுக்கு, காலக் காப்பீடு சிறந்தது. நீங்கள் இளைஞராக இருந்தால், குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற சார்புடையவர்களாக இருந்தால் அல்லது உங்களுக்கு வீட்டுக் கடன் போன்ற பொறுப்புகள் இருந்தால், எதிர்பாராத நிகழ்வின் போது ஒரு டேர்ம் பிளான் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்..
நீங்கள் கால காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு என எதை தேர்வு செய்தாலும், உங்கள் குடும்பத்திற்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்க போதுமான பாதுகாப்பு இருப்பது அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.