உலக அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியர்கள் 4 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் அமெரிக்கவாழ் இந்தியர்களான ஜெ சௌத்ரி, வினோத் கோஸ்லா, ரொமேஷ் வாத்வானி, ராகேஷ் கங்வால் ஆகியோர் ஆவார்கள்.
ஜே சௌத்ரி
அமெரிக்கவாழ் இந்தியரான இவர், 1996இல் செக்யூர்ஐடி என்ற நிறுவனத்தை தொடங்கி இன்று அமெரிக்காவின் முன்னணி நிறுவனமாக வளர்த்துள்ளனர். தற்போது சௌத்ரியின் சொத்து மதிப்பு 8.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
வினோத் கோஸ்லா
விளோத் கோஸ்லாவும் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி முன்னேறியுள்ளார். இவர், 1982ஆம் ஆண்டில் பில் ஜாய், மெக்னீலி, ஆண்டில் பெக்டோல் ஷெய்ம் ஆகியோருடன் இணைந்து இததை தொடங்கினார்.
தற்போது இவருக்கு 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளது.
ரோமேஷ் டி வாத்வானி
ரோமேஷ் டி வாத்வானி ஹெல்த் மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5.1 பில்லியன் டாலர் ஆகும்.
ராகேஷ் கங்வால்
1984ஆம் ஆண்டு யுனைடெட் ஏர்லைன்ஸில் தனது பணியை தொடங்கிய ராகேஷ் கங்வால் தற்போது அமெரிக்க 400 பணக்காரர்கள் பட்டியலில் 261ஆவது இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு 4.1 பில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil