டெலிகாம் சந்தையில், பிரபல நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், போன்றவை டேட்டாவிற்காக வழங்கும் சிறப்பு ரிசார்ஜ் திட்டங்கள்.
ஏர்டெல் :
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள மூன்று ரீசார்ஜ் திட்டங்களாக ரூ. 49, ரூ. 92, ரூ. 98 போன்றவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை ஆகும். ஒரு நாள் மட்டுமே போதும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 திட்டம். இதில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி டேட்டா. ஒரு வாரம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 92 திட்டம். இதில் 6ஜிபி டேட்டா வழங்கப்படும். ரூ. 98 திட்டம் 28 நாட்கள் செயல்படும். 1 ஜிபி டேட்டா. இதை 1 நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 28 நாட்கள் வரை வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ:
ஜியோவின், ரூ. 19, ரூ 52, ரூ. 98 இந்த மூன்று திட்டங்களும் எர்டெல்லை விட வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளன. ஒரு நாள் மட்டுமே செயல்படும் ரூ 19 திட்ட்யத்தில். 0.15 ஜிபி டேட்டா. அத்துடன் 20 இலவச எஸ் எம் எஸ்க்கள். 7 நாட்கள் செயல்படும் ரூ. 52 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.05 ஜிபி டேட்டா. கூடவே, 70 இலவச எஸ் எம் எஸ்க்கள். 28 நாட்கள் செயல்படும் ரூ. 98 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டா.