Fixed Deposits | வங்கிகள் பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) அல்லது கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்துகின்றன.
அந்த வகையில், 10 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளால் வழங்கப்படும் சிறந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
வங்கி | அதிகப்பட்ச வட்டி (%) | மூத்தக் குடிமக்கள் வட்டி (%) | 5 ஆண்டு டெபாசிட் வட்டி (%) |
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9.00 | 8.15 | 0.50 |
சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.65 | 8.25 | 0.24-0.50 |
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.55 | 6.50 | 0.50 |
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.50 | 7.25 | 0.50 |
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.50 | 7.25 | 0.50 |
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.50 | 7.75 | 0.60 |
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.50 | 7.20 | 0.50 |
எஸ்.பி.எம் வங்கி | 8.25 | 7.75 | 0.50 |
இ.எஸ்.ஏ.எஃப் ஸமால் ஃபைனான்ஸ் வங்கி | 8.25 | 6.25 | 0.50 |
ஆர்.பி.எல் வங்கி | 8.00 | 7.10 | 0.50 |
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.5% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.65% வரை வட்டி விகிதங்களையும், மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் நிலையான வைப்புத் தொகையில் ஆண்டுக்கு 9.15% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.55% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.05% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 8.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 8.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
எஸ்.பி.எம் வங்கி
எஸ்.பி.எம் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு வரி சேமிப்பு எஃப்டிகளுக்கு ஆண்டுக்கு 7.75% வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களில் ஆண்டுக்கு 8.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, சாதாரண வைப்பாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 8.25% வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஆர்.பி.எல் வங்கி
RBL வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொது நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 8% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.