Advertisment

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் 2வது இடத்தைப் பிடித்த பில்கேட்ஸ்

புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18 வது இடத்தில் உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bill and melinda gates Foundation Award

bill and melinda gates Foundation Award

the Bloomberg Billionaires Index: புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18 வது இடத்தில் உள்ளார்.

Advertisment

நியூயார்க்கைச் சேர்ந்த புளூம்பெர்க் என்கிற நிதி, மின்னணு தகவல் மற்றும் ஊடகம் தொடர்பான ஒரு தனியார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 500 பணக்காரர்களின் பட்டியலை தினமும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் எப்படி வெளியிடப்படுகிறது என்றால், ஒவ்வொரு பணக்காரரின் சுயவிவரப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிகர வர்த்தக மதிப்பு மற்றும் நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் குறிப்பிடப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி, உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் 114 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து, முதலிடத்தில் இருந்து மெல்ல 3வது இடத்துக்கு சரிந்த மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கடந்த இரண்டு வாரங்களுக்குள் 106 பில்லியன் டாலர் மதிப்புடன் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்து எல்.வி.எம்.எச் மோயித் வுட்டன் சே என்கிற உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பெர்னாட் அர்னால்ட் மூன்றாவது இடத்தையும் பெர்க்‌ஷைர் ஹாத்வே என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபட் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 73.9 பில்லியன் டாலருடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு கனிசமாக குறைந்துள்ளது. எண்ணெய், ஜவுளி மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் -இன் பங்கு விலைகள் 7 சதவீதம் சரிந்ததைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டில் 18வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவருடைய நிறுவனத்தின் நிகர மதிப்பு 47.2 பில்லியன் டாலராக உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment