/tamil-ie/media/media_files/uploads/2022/12/Covai-shopping-festival.jpg)
கோவை ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது.
கோவையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 8ஆவது முறையாக கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 எனும் நுகர்வோர் திருவிழா வரும் டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். நுகர்வோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த கண்காட்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த நிலையில், கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2022 கண்காட்சி வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனவரி ஒன்றாம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் ராஜேந்திரன் கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தக் கண்காட்சியில் சுமார் 270க்கும் மேல் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
கண்காட்சியில் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தக் கண்காட்சி வீட்டு உபயோக சாதனங்கள் சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள் பர்னிச்சர்ஸ் ஜவுளி வகைகள் கைவினைப் பொருட்கள் உடற்பயிற்சி சாதனங்கள் ஆட்டோமொபைல் உதிர் பாகங்கள் சமையலறை பொருட்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும்” என்றனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.