சென்னையில் வசிக்கும் பி டில்லிபாபு, 2021 டிசம்பரில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஐடிசியின் சன்ஃபீஸ்ட் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.
அந்த பேக்கேஜில் 16 பிஸ்கட்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும், அதில் 15 பிஸ்கட்கள் மட்டுமே இருந்தன. ஒரு பிஸ்கட்-ஐ காணவில்லை.
இது தொடர்பாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், “ஐடிசி தினமும் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிக்கிறது.
இதில் ஒரு பிஸ்கட்டின் விலை 75 காசுகள் ஆகும். அந்த வகையில் ஐ.டி.சி ரூ.29 லட்சம் நுகர்வோரை ஏமாற்றுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஐ.டி.சியின் விளக்கத்தை நிராகரித்த நீதிமன்றம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் நீதிபதி, “ஐ.டி.சி. அளித்த விளக்கம் ஆவியாகும் பொருள்களுக்கு மட்டுமே செல்லும். பிஸ்கட்டுகள் காலப்போக்கில் எடை இழக்காது என்பதால் இந்த விளக்கம் செல்லாது” எனத் தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“