சென்னையில் 22 ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4893 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.39144க்கு விற்கப்படுகிறது. ஆக சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.
24 காரட் 99.99 தூயத் தஙகத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5295 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.42360 ஆக உள்ளது. நேற்று 22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் விலை முறையே ரூ.4900 மற்றும் ரூ.5302 ஆக இருந்தது.
தங்கம் விலை இந்த மாதத்தில் ஆக.1ஆம் தேதி கிராம் ரூ.4795 ஆக இருந்தது. கடந்த 10 நாள்களில் ஏற்ற இறக்கத்துடன் வணிகமான தங்கம் தற்போதுவரை ரூ.98 அதிகரித்து காணப்படுகிறது.
வெள்ளி விலை
கடந்த நாள்களில் கிராம் வெள்ளி ரூ.60 ஆக இருந்த நிலையில் தற்போது கிராம் ரூ.64.20 காசுகளாக உள்ளது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 30 காசுகள் குறைவாகும்.
நேற்று அதிரடியாக வெள்ளி ரூ.1.50 காசகள் கிராமுக்க அதிகரித்து விற்பனையானது. தற்போது ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.64200 ஆக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 எனவும் டீசல் ரூ.94.24 எனவும் விற்பனையாகிவருகிறது. நாட்டின் தலைநகர் உள்பட மற்ற நகரங்களில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் (சரக்கு சேவை வரி மற்றும் இதர வரிகள் நீங்கலாக) விலை பட்டியலை பார்க்கலாம்.
- மும்பை ரூ.47960
- டெல்லி ரூ.48110
- கொல்கத்தா ரூ.47960
- பெங்களுரு ரூ.48010
- ஹைதராபாத் ரூ.47960
- கேரளம் ரூ.47960
- அகமதாபாத் ரூ.48010
- ஜெய்ப்பூர் ரூ.48110
- லக்னோ ரூ.48110
- பாட்னா ரூ.47990
- சண்டிகர் ரூ.48110
- புவனேஸ்வர் ரூ.47960
தலைநகர் டெல்லியில் திங்கள்கிழமை (ஆக.9) 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.97 அதிகரித்து 10 கிராம் ரூ.52490க்கு விற்பனையானது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.527 அதிகரித்து கிலோ வெள்ளி ரூ.57938க்கு விற்பனையானது. தங்கம் மற்றும் வெள்ளி விலை போக்குவரத்து செலவினங்ள் மற்றும் மாநில வரி உள்ளிட்ட காரணங்களால் இடத்துக்கு இடம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“