சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4822 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38576க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4850 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38800 ஆக இருந்தது.
24 காரட் 99.99 தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5224 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41792 என உள்ளது. நேற்று இது கிராம் ரூ.5252 எனவும் சவரன் ரூ.42016 எனவும் விற்கப்பட்டது.
ஆக இன்று கிராமுக்கு ரூ.28ம், சவரனுக்கு ரூ.224 வீழ்ச்சியும் கண்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் 80 காசுகள் சரிவை சந்தித்து கிராம் வெள்ளி ரூ.62ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.62 ஆயிரமாக உள்ளது.
வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி அதிரடியாக வெள்ளி விலை 64.80 காசுகளாக அதிகரித்து கிலோ ரூ.64800 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெள்ளி விலை படிப்படியாக குறைந்துவருகிறது. ஜூலை மாதத்தில் ஒருமுறை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.60 ஆக விற்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 30 நாள்களில் வெள்ளி கிராமுக்கு ரூ.2 வரை அதிகரித்து கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடியுள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களில் 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் தங்கத்தின் விலை
- மும்பை ரூ.48490
- டெல்லி ரூ.48050
- கொல்கத்தா ரூ.47900
- பெங்களுரு ரூ.47950
- நாசிக் ரூ.47930
- புனே ரூ.47930
- வதோதரா ரூ.47930
- லக்னோ ரூ.48050
- சண்டிகர் ரூ.48050
- சூரத் ரூ.47950
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் வலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும் டீசல் லிட்டர் ரூ.94.24 எனவும் தொடர்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இடத்துக்கு இடம் மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் காரணமாக வேறுபடுகிறது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்கத்தின் விலையில் இறக்கங்கள் காணப்படுகின்றன. கச்சா பொருள்களின் விலையும் அதிரடியாக சரிந்து காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil