முதலீட்டில் ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தைத் தரும் பல்வேறு அஞ்சலக திட்டங்கள் உள்ளன. அஞ்சல் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு சிறப்பு சிறுசேமிப்புத் திட்டமாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளது.
இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடி ஆதரவைப் பெறுகிறது. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு சிறந்த வருமானத்துடன் அதில் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள். மேலும், இந்தக் கணக்கை வேறொருவருக்கு மாற்றும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது .
அஞ்சல் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
இந்தத் திட்டத்தில் 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள் தொடங்கலாம். மைனர் சார்பாக ஒரு பாதுகாவலரும் இந்தக் கணக்கைத் திறக்கலாம். இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், மைனர் 10 வயதுக்கு மேல் இருந்தால், அவர் தனது சொந்த பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தில், தற்போது 7.7 சதவீத வருடாந்திர வட்டி பெறுகிறது. இந்த விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது ஆனால் முதிர்ச்சியின் போது செலுத்தப்படும். இதில் வருமானத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இன்றைக்கு இந்தத் திட்டத்தில் ரூ. 10,000 முதலீடு செய்தால், முதிர்ச்சியில் அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் ரூ.14,490 கிடைக்கும்.
ரூ.1000 முதல் முதலீடு
5 ஆண்டுகளுக்குப் பிறகு ரிட்டர்ன் தொகையாக ரூ.4,490 கிடைக்கும். எந்தவொரு முதலீட்டாளரும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) குறைந்தபட்சம் ரூ. 1000 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
இது தவிர, நீங்கள் எந்தத் தொகையையும் ரூ. 100 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. என்எஸ்சியில் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கிறது. விதிகளின்படி, தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டக் கணக்கை பொதுவாக முதிர்வுக்கு முன் மூட முடியாது. சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே அதை மூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“