Post Office Savings Scheme | இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீட்டைச் சேமிப்பதற்கு அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் நல்லதொரு வழியாக கருதப்படுகின்றன.
எனினும், இதில் பலர் வரி சேமிப்புக்காக அஞ்சல் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். எனினும், சில அஞ்சல் அலுவலக திட்டங்களில் வரிச் சலுகைகள் கிடைக்காது.
ஆக, அஞ்சலகத்தின் எந்தத் திட்டங்களில் வரி விலக்கு பலன் கிடைக்காது என்பதை பார்க்கலாம்.
1) கிஷான் விகாஸ் பத்ரா
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் வரி விலக்கின் கீழ் வராது. எனினும் இந்தத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். ரிஸ்க் இல்லாததால் பல முதலீட்டாளர்கள் இதை விரும்புகிறார்கள்.
2) போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்
மிகவும் பிரபலமான இந்த 5 ஆண்டு திட்டங்களில் வரி விலக்கு பலன்கள் அளிக்கப்பட மாட்டாது.
3) தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்
தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டத்தில் 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 3 வரை முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்காது. 5 ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டில், வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் ரூ.1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.
4) மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் முதலீட்டுத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வரி விலக்கு இல்லை. அதாவது வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை இல்லை.
எனினும், தபால் அலுவலகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“