Advertisment

எஃப்.டி-க்கு 8 சதவீதம் வரை வட்டி: இந்த 2 வங்கியை பாருங்க!

இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத்தொகை அதிக வட்டி விகிதங்கள் இந்த மாதத்துடன் முடிவடைகின்றன. ஐடிபிஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டானது அக்டோபர் 31, 2023ல் முடிவடையும்.

author-image
WebDesk
New Update
Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

ஐடிபிஐ வங்கி, அம்ரித் மஹோத்சவ் எஃப்டி என அழைக்கப்படும் சிறப்பு எஃப்டியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத்தொகை அதிக வட்டி விகிதங்கள் இந்த மாதத்துடன் முடிவடைகின்றன.

இந்தியன் வங்கியின் சிறப்பு வைப்புத்தொகை அக்டோபர் 31, 2023 அன்று முடிவடையும். அதேபோல், 375 நாள்கள் மற்றும் 444 நாள்கள் கொண்ட ஐடிபிஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டானது அக்டோபர் 31, 2023ல் முடிவடையும்.

Advertisment

இந்தியன் வங்கியின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்கள்

இந்த் 400 நாள்கள்

இந்த சிறப்பு FD ஆனது 400 நாட்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இந்தியன் வங்கி இப்போது பொது மக்களுக்கு 7.25%, மூத்தவர்களுக்கு 7.75% மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.00% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

இந்த் சூப்பர் 300 நாள்கள் 

இந்தத் திட்டம் 01.07.2023 அன்று தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு 7.05 சதவீதமும், மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் 7.55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன் 7.80 சதவீதமும் கிடைக்கும்.

ஐடிபிஐ எஃப்டி

ஐடிபிஐ வங்கி, அம்ரித் மஹோத்சவ் எஃப்டி என அழைக்கப்படும் சிறப்பு எஃப்டியை அறிமுகப்படுத்தியது. 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் கொண்ட இந்த எஃப்டி கடைசி நாள் செப்டம்பர் 30, 2023ல் இருந்து அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அம்ரித் மஹோஸ்தவ்

வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்குகிறது. வங்கி வழக்கமான, NRE மற்றும் NRO வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டி விகிதத்தை 375 நாட்களுக்கு அம்ரித் மஹோத்சவ் FD திட்டத்தின் கீழ் வழங்குகிறது. மேலும், முன்கூட்டியே திரும்பப் பெறுதல் மற்றும் மூடுவது அனுமதிக்கப்படுகிறது.

மேலும் 0-6 நாள்கள் எஃப்.டிக்கு வட்டி எதுவும் வழங்கப்படாது. இந்த வங்கியின் வட்டி விகிதம் 3ல் தொடங்கி 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சாதாரண மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7 சதவீதமாகவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment