தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ ₹2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ₹5 கோடிக்கும் குறைவாக திருத்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் FD விகிதங்கள் 6 டிசம்பர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.75% முதல் 7.25% வரை வழங்குகிறது. ஆனால் ₹5 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கூடுதல் வட்டி விகிதத்தை வழங்காது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கியும் டிச.6, 2023 முதல் ₹5 கோடிக்கு மேலான தொகைகளுக்கான நிலையான வைப்பு (FD) விகிதங்களைத் திருத்தியுள்ளது.
சமீபத்தில், HDFC வங்கி, திரும்பப் பெற முடியாத நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியிருந்தது. தற்போது வங்கி 4.5 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி வழங்குகிறது.
ஃபெடரல் வங்கி எஃப்டி வட்டி விகிதம்
ஃபெடரல் வங்கி தனது டெபாசிட் வட்டி விகிதங்களை டிசம்பர் 5, 2023 முதல் மாற்றியமைத்துள்ளது. இதில் குடியுரிமை அல்லாதவர்கள் செய்யும் 500 நாட்கள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 7.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு, ஃபெடரல் வங்கி இப்போது 500 நாள் தவணைக்காலத்திற்கு 8.15% மற்றும் 21 மாதங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான தவணைக்காலங்களுக்கு 7.80% வருமானத்தை வழங்குகிறது.
பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா, அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான (₹2 கோடி மற்றும் அதற்கு மேல் ரூ.10 கோடிக்கும் குறைவானது) நிலையான வைப்புத்தொகையின் விகிதங்களை டிசம்பர் 1, 2023 முதல் உயர்த்தியுள்ளது.
புதிய விகிதங்களின்படி, “46 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை 5.25% ஆகவும், 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரை 6.00% ஆகவும், 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை 6.25% ஆகவும் உயர்த்தியுள்ளது. 211 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான கால டெபாசிட்களுக்கு 6.50% ஆகவும், 1 ஆண்டு கால டெபாசிட்களுக்கு 7.25% வட்டி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“