ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் பாதுகாப்பான அதேநேரம் நல்ல வருமானம் ஈட்ட கூடியதாக உள்ளன. இதனால் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்கின்றனர்.
இந்த நிலையில் 4 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் மூத்தக் குடிமக்களுக்கு நல்ல வட்டியை வழங்குகின்றன. மேலும், பொதுத்துறை வங்கிகளை போன்று ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
எனினும், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு வரம்புக்குள் வரும். இது தொடர்பான சந்தேகங்களை வங்கியிடம் முழுமையாக கேட்டு அறிந்துக் கொள்வது நல்லது.
தற்போது நாம் மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டி கொடுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 4% முதல் 8.60% வரை வட்டியை வழங்குகிறது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி அதிகபட்ச வட்டியான 8.60% செலுத்துகிறது.
இது தவிர, வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3% முதல் 8.50% வரை வட்டியை வழங்குகிறது.
அதே நேரத்தில், வங்கி 1095 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 8.50% வட்டி வழங்குகிறது. உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 4% முதல் 8.50% வரை வட்டி அளிக்கிறது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி அதிகபட்சமாக 8.50% வட்டியை வழங்குகிறது.
இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 21 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தால், வாடிக்கையாளர்கள் 3.5% முதல் 8.50% வரை வட்டியை பெறலாம்.
தொடர்ந்து, 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கி அதிகபட்சமாக 8.50% வட்டியை செலுத்துகிறது. உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 21 முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“