/tamil-ie/media/media_files/uploads/2023/04/how-to-reduce-home-loan-emi.png)
வீட்டுக் கடனின் காலம் பொதுவாக 3 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைந்து floating rate விகிதத்தைப் பயன்படுத்தத் தேர்வு செய்துள்ளன.
இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றும் ஒவ்வொரு முறையும் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும் அல்லது குறையும்.
பொதுவாக, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் சிபில் ஸ்கோர், கடன் தொகை, காலம், வருமானம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. மேலும், வீட்டுக் கடனின் காலம் பொதுவாக 3 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கும்.
அந்த வகையில், வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் 5 வங்கிகள் இங்கே உள்ளன.
வங்கி பெயர் | RLLR (%) | குறைந்த வட்டி | அதிகப்பட்ச வட்டி |
HDFC Bank | - | 8.45% | 9.85% |
Indusind Bank | - | 8.5% | 9.75% |
Indian Bank | 9.20 | 8.5% | 9.9% |
Punjab National Bank | 9.25 | 8.6% | 9.45% |
Bank of Maharashtra | 9.30 | 8.6% | 10.3% |
நிலையான வட்டி விகிதத்தில், சந்தை சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடனுக்கான வட்டி நிலையானது, அதே நேரத்தில் floating rate வட்டி விகிதத்தில், சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் வட்டி மாறக்கூடும்.
வீட்டுக் கடன் காப்பீடு பாலிசி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின்படி, வீட்டுக் கடனுக்கு இரண்டு வகையான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன.
அதில் ஒன்று சொத்துக் காப்பீடு மற்றொன்று பொறுப்புக் காப்பீடு ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.